கோல் மார்வல்ஸை தோல்வி அடையச் செய்தது ஜெவ்னா கிங்ஸ்

Published By: Vishnu

05 Jul, 2024 | 11:53 PM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 6ஆவது போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை 2 பந்துகள் மாத்திரம் மீதம் இருக்க 5 விக்கெட்களால் ஜெவ்னா கிங்ஸ் வெற்றிகொண்டது.

கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இப் போட்டியில் 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இதன் மூலம் கோல் மார்வல்ஸ் தனது முதலாவது தோல்வியைத் தழுவியதுடன் லங்கா பிறீமியர் லீக் போட்டியில் பங்குபற்றும் ஐந்து அணிகளும் இதுவரை  குறைந்தது ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்தப் போட்டியில் டிம் சீஃபேர்ட் குவித்த ஆட்டம் இழக்காத சதம் கடைசியில் பலனற்றுப் போனது.

ஜெவ்னா கிங்ஸ் சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

குறிப்பாக ரைலி ரூசோவ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றினார்.

அவரைவிட மத்திய வரிசையில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 13 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 35 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 14 ஓட்டங்களையும் அணித் தலைவர் சரித் அசலன்க ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஸஹூர் கான் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் மார்வல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட ஓட்டங்கள் டிம் சீஃபேர்ட்டின் துடுப்பிலிருந்தே வந்தது.

மிகத் திறமையாக அதிரடி வேகத்தில் துடுப்பெடுத்தாடிய டிம் சீஃபேர்ட் 63 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 104 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவரும் பானுக்க ராஜபக்சவும் 3ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதில் 28 ஓட்டங்களை பானுக்க ராஜபக்ச பெற்றார்.

அதுவே கோல் மார்வல்ஸ் இன்னிங்ஸில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

அலெக்ஸ் ஹேல்ஸ் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: அஸ்மத்துல்லா ஓமர்ஸாய்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ரி20இல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து...

2026-09-16 13:59:44
news-image

சுப்பர் லீக் கடைசிப் போட்டியில் புளூ...

2026-09-15 21:08:58
news-image

இங்கிலாந்துடனான ரி20 தொடர் தோல்விகளுக்கு முடிவு...

2026-09-15 19:18:47
news-image

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன்...

2026-09-15 14:49:55
news-image

சாதனை வீரர் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த...

2026-09-15 13:52:00
news-image

விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் :...

2026-09-15 13:36:58
news-image

சுப்பர் சிக்ஸில் விளையாட  புளூ ஸ்டார் ...

2026-09-14 22:08:25
news-image

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ்...

2026-09-14 14:18:46
news-image

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா...

2026-09-14 11:13:41
news-image

91.09 மீற்றர்! இலங்கையின் ரூமேஷ் பத்திரகே...

2026-09-14 09:51:50
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண சம்பியன்...

2026-09-14 05:36:19
news-image

றினோனை வீழ்த்தி முதல் சுற்றில் தோல்வி...

2026-09-13 21:10:41