(நா.தனுஜா)
கடன்மறுசீரமைப்பு செயன்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்து, அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அடுத்த 10 வருடங்களில் நிலையாக கடன் ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்ளமுடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன்மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (05) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நிரந்தரமாக மீட்சியடைவதற்கு நாடு பிரதானமாக இரண்டு முறைகளில் மறுசீரமைக்கப்படவேண்டியுள்ளது. முதலாவதாக வரவு - செலவுத்திட்டத்தில் புதிய நிலைமாற்றம் அடையப்படவேண்டும். இரண்டாவதாக பிற தரப்பினரிடமிருந்து கடன் பெறுவதைக் குறைத்து, இறக்குமதிகளில் மாத்திரம் தங்கியிராமல், ஏற்றுமதிகளைப் பெருமளவால் ஊக்குவிக்கவேண்டும். இந்த இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் பெரிதும் பங்களிப்புச்செய்யும் என நம்புகின்றேன்.
அடுத்ததாக கடன்மறுசீரமைப்பைப் பொறுத்தமட்டில், தற்போது அதில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை எம்மால் அடைந்துகொள்ள முடிந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையின் கடன்கள் ஸ்திரமான நிலையில் இல்லை என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவித்தது. அதனையடுத்தே கடன்மறுசீரமைப்பு செயன்முறையை முன்னெடுக்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இருப்பினும் அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நிலவிய தாமதத்தைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு நாம் கடன்களை மீளச்செலுத்துவதை இடைநிறுத்துவதாக அறிவித்தோம். அதன்பின்னர் 2022 செப்டெம்பர் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டபோது அடுத்த 10 வருடங்களுக்குள் கடன்கள் மற்றும் மொத்தத்தேசிய உற்பத்தி இடைவெளியை சாதக மட்டத்தில் பேணல்இ மொத்தத் தேசிய செலவினத் தேவைப்பாட்டைக் குறைத்தல் மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன் மீள்செலுத்துகையைக் குறைத்தல் ஆகிய 3 பிரதான இலக்குகள் அடையப்படவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன்வழங்குனர்களுடன் கடந்த மாத இறுதியில் இணக்கப்பாட்டை எட்டிய நாம், சர்வதேச பிணைமுறிதாரர்களுடன் நேற்று முன்தினம் இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றோம். இருப்பினும் அந்த இணக்கப்பாடு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கும், கடன்மறுசீரமைப்பு விதிகளுக்கும் ஏற்புடையவையாக அமைந்திருக்கின்றனவா என சர்வதேச நாணய நிதியமும், உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன்வழங்குனர் குழுவும் ஒப்புதல் அளிக்கவேண்டியது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM