அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

05 Jul, 2024 | 05:10 PM
image

மாற்றி அமைத்துக் கொண்ட உணவு முறைகளாலும், ரசாயனம் கலந்த நிறமிகளை பசியாறும் உணவில் சேர்த்துக் கொள்வதாலும் எம்மில் பலருக்கு பல வகையினதான புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை எம்முடைய மக்கள் இன்னும் பெறவில்லை என்றும் , புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால் பேரதிர்ச்சி அடைவதும் தான் இன்றும் மக்களிடத்தில் உள்ளது என்றும் சுகாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்நிலையில் அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய் பாதிப்பிற்கு நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

காய்ச்சல், எலும்பில் வலி, சோர்வு, மூச்சு திணறல், தோலில் மாற்றம், அடிக்கடி தொற்று பாதிப்பு, மூக்கடைப்பு மற்றும் மூக்கு, ஈறு ஆகியவற்றிலிருந்து ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும்.  உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

இதன் போது வைத்தியர்கள் குருதி பரிசோதனை, எலும்பு மஜ்ஜை பரிசோதனை, தண்டுவட செயல் திறன் பரிசோதனை மற்றும் திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பர். மேலும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு எந்த வகையினதானது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள சில சிறப்பு பரிசோதனைகளையும் பரிந்துரைக்கக்கூடும்.  இதன் முடிவுகளின் அடிப்படையில் உங்களது பாதிப்பு வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

உங்களுடைய குருதியிலும், எலும்பு மஜ்ஜையிலும் உற்பத்தியாகும் செல்களின் இடம்பெற்றுள்ள வெள்ளை அணுக்களின் அபிரிமிதமான செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிப்பர்.

மேலும், இந்த தருணத்தில் ரிமிசன் இன்டக்சன் தெரபி, கன்ஸாலிடேசன் தெரபி, கீமோதெரபி, டார்கெட்டட் தெரபி போன்ற சிகிச்சைகளையும் வழங்கி நிவாரணம் தருவர். வெகு சிலருக்கு மட்டும் அவர்களுடைய வயது, உடல் ஆரோக்கியம் போன்ற வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சையை செய்து கொள்ள பரிந்துரைப்பர்.

வைத்தியர் கோபிநாதன்

தொகுப்பு அனுஷா.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மியூகோசிடிஸ் எனும் சளி வீக்க பாதிப்பிற்குரிய...

2024-07-23 14:35:47
news-image

எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும் நரம்பியல்...

2024-07-22 17:19:21
news-image

பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ்...

2024-07-20 18:21:12
news-image

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவது...

2024-07-19 17:33:29
news-image

கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த...

2024-07-19 17:27:13
news-image

ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு...

2024-07-17 17:23:03
news-image

கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன...

2024-07-16 14:41:29
news-image

முடி அகற்றுவதற்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2024-07-15 17:07:51
news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59