எம்முடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொடக்க விழா அல்லது சுப நிகழ்வுகள் நடைபெறும் தருணங்களில் கும்பம் வைத்து வழிபடுவது வழக்கம். அந்த கும்பத்தின் மீது தேங்காயை வைப்பதும் வழக்கம். அதிதிகள் யாரேனும் வருகை தரும் போது அவர்களுக்கு பூரண கும்ப மரியாதையை வழங்குவோம். அந்த பூரண கும்பத்தின் உச்சியிலும் தேங்காய் தவறாமல் இடம் பிடித்திருக்கும்.
இறைவனுக்கு வழிபாட்டு பிரார்த்தனையின் போது தவறாமல் தேங்காய் முதன்மையான இடத்தை பிடித்திருக்கும். இந்நிலையில் எம்மில் பலருக்கும் கும்ப கலசத்தின் மீது தேங்காய் வைப்பதற்கு பின்னணி குறித்து தெரியாதிருப்பார்கள் அல்லது அது தொடர்பான சந்தேகத்துடனேயே அதனை பின்பற்றுவார்கள். இந்நிலையில் இது குறித்து எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பின்வருமாறு அதற்கு விளக்கம் அளிக்கிறார்கள்.
மனிதன் உயிர் வாழ தேவையானது தண்ணீர். அதனால் தான் சுப நிகழ்வுகளின் போது நீரில் இறைவனை ஆவாகனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். இறைவனை கலசமாகவும், இறைவனின் ஆற்றலை அதனுள் இருக்கும் நீராகவும் உருவகப்படுத்திக் கொள்கிறோம்.
தாமிரத்தினாலான சொம்பு அல்லது குடம் ,பித்தளையினாலான சொம்பு அல்லது குடம் இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் போதுமான அளவிற்கு நீரை நிரப்பி அதில் ஏலக்காய், இலவங்கம், பச்சைக் கற்பூரம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை இட்டு, அதன் மேல் மா இலையையும், அதன்மேல் தேங்காயையும் வைத்து பூஜிக்க தொடங்குகிறோம்.
இதன் பின்னணியில் அற்புதமான நுட்பமான அறிவியல் உள்ளது. அது என்னவெனில் தாமிரம் அல்லது பித்தளை ஆகியவை எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இதனை கடத்திகள் என்றும் குறிப்பிடலாம். இந்த கலசத்தின் மீது தேங்காயை வைத்து பூஜையை தொடங்கும் தருணத்தில் வேதம் படித்த பண்டிதர்கள் வேத மந்திரத்தை உச்சரிப்பார்கள். அந்த மந்திர ஒலியலையை உலோகங்கள் கடத்தி தண்ணீருக்குள் செலுத்தும். இந்த ஒலியலையில் ஏதேனும் மாசு அல்லது ஒலி தடைகள் இருந்தால் அதனை கலசத்தின் மேல் சுற்றி இருக்கும் நூல்கள் வடிகட்டி, தூய்மையான மந்திர ஒலியை தண்ணீருக்குள் கடத்துகிறது.
இந்த தருணத்தில் தண்ணீருக்குள் இருக்கும் ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் ஆதார சக்தியாக கருதப்படுகிறது. இறையின் ஆசியையும், அருளையும் பெற்றிருக்கும் கலசத்திற்குள்ளிருக்கும் நீரின் ஆற்றல் வெளியிடங்களுக்கு பரவாதிருக்க அதன் மேற்பகுதியில் மா இலையையும் தேங்காயையும் பாதுகாப்பு அரணாக வைக்கிறார்கள்.
பொதுவாக மாவிலை மரத்திலிருந்து பறித்த பிறகும் நூறு மணி தியாலங்கள் வரை காயாது. மேலும் மாமரம் என்பது மெய்ஞானத்தை தரும் ஆற்றல் படைத்தது. அதேபோல் தேங்காய்க்கு மட்டும்தான் மூன்று கண்கள் உள்ளது. வேத மந்திரத்தின் உச்சரிப்பின் போது வேத பண்டிதர்கள் ''சோம சூரிய அக்னி லோசாநாய நமஹ'' என குறிப்பிடுவர். வலது கண் +இடது கண்+ நெற்றிக்கண்+ ஆகிய மூன்று கண்களை கொண்டிருக்கும் சிவனை குறிப்பதால் அதே மூன்று கண்களை கொண்டிருக்கும் தேங்காயையும் சிவபெருமானின் தலைப் பகுதியாக உருவகப்படுத்தி கலசத்தின் மீது வைக்கிறோம்.
இந்த நுட்பமான காரணத்தினால் தான் சுப நிகழ்வுகளின் போது கலசத்தின் மீதும், கும்ப கலசத்தின் மீதும் மா இலையையும், தேங்காயையும் வைத்து பூஜிக்கிறோம்.
மேலும், சுப நிகழ்வு நடைபெற்று நிறைவடைந்த உடன் இந்த கலசத்தின் மீதிருக்கும் தேங்காயை எடுத்து, அதன் கீழ் இருக்கும் மா இலைகளால் உள்ளிருக்கும் புனித நீரை வேத பண்டிதர்கள் எம் மீதும், எம்முடைய நண்பர்கள் மீதும், அந்த சுப நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் பார்வையாளர்கள் மீதும் தெளிக்கிறார்கள். இதன் மூலம் இறைவனின் ஆற்றலை நாம் பெறுகிறோம்.
இத்தகைய காரணங்களினால் தான் உங்களுடைய வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகே இருக்கும் சிறிய ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் என்றால் அந்தத் தருணத்தில் அந்த ஆலயத்தின் சன்னதியில் இருந்து, இறைவனின் கலசத்தையும் அந்த கலசத்தின் மீது அபிஷேகம் செய்வதற்காக யாகசாலையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரையும் அவர்கள் மக்கள் மீது தெளிக்கும் வரை காத்திருந்து அந்த நீரின் மூலமாக இறை அருளை பெறுமாறு ஆன்மீக முன்னோர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM