ஐபிஎல் 10 ஆவது கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிய நிலையில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹைதராபாத் அணி 35 ஓட்டங்களால் பெங்களூர் அணியை தோல்வியடைய செய்து பத்தாவது ஐபிஎல் போட்டி தொடரில் தனது முதல் வெற்றியை சுவைத்தது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வொட்ஸன் தலைமையிலான பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தவான் , யுவராஜ், ஹென்றிக்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்கள் பெற்றது.

208 என்ற மாபெரும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே  பெற்றது.

35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத்  அணி முதல் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் முதல் 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத்  உள்ளது.

இந்த போட்டியில் 62 ரன்கள் குவித்த யுவராஜ் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.