சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் 'கூலி' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷோபனா, திலீப், சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இதனிடையே இந்தத் திரைப்படத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பதும், லோகேஷ் கனகராஜ் - சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - உலக நாயகன் கமல்ஹாசன் - புரட்சித் தமிழன் சத்யராஜ் கூட்டணியில் தயாராகிறது என்பதும், இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களும் 'கூலி' திரைப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM