பிரபலமான நடன ஒழுங்கமைப்பு மையமான With My Feetஆனது, யூனியன் அசூரன்ஸின் அனுசரணையுடன் பழம்பெரும் நடன கலைஞரும் மற்றும் நடன இயக்குனருமான நயோமி இராஜரட்ணம் அவர்களின் Epic Black நிகழ்வை நடாத்தவுள்ளது. பல்வகைப்பட்ட நடனப் பாணிகளை வெளிப்படுத்தவுள்ள Epic Black நிகழ்வானது, 2024 ஆகஸ்ட் 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பிஷப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
எத்தனையோ நட்சத்திர நிகழ்வுகளை நடாத்தியுள்ள With My Feetஇன் நீண்ட பட்டியலில் இந்நிகழ்வும் சேர்க்கப்படவுள்ளதுடன், With My Feetஇன் பின்னாலுள்ள உந்துசக்தியும், மக்கினொன்ஸ் டிராவல்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியும், இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் உப தலைவரும், மற்றும் அமெச்சூர் நடன சங்கத்தின் முன்னாள் தலைவருமாக சேவையாற்றி இந்த ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி இவ்வுலகை விட்டு நீங்கிய அமரர் ட்ரெவோர் இராஜரட்ணம் அவர்களுக்கு செலுத்தும் இதயபூர்வமான அஞ்சலியாகவும் இந்நிகழ்வு அமையவுள்ளது. அவரது தளராத மனப்பான்மை, பாரம்பரியச் சிறப்பு மற்றும் “நிகழ்ச்சி தொடர்ந்து இடம்பெற வேண்டும்” என்ற நம்பிக்கை With My Feet மற்றும் அக்குழுவின் பிரதிபலிப்பாக உள்ளது.
2000ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் எத்தனையோ மகத்தான நடன நிகழ்வுகள் மூலம் தலைமுறைகள் மத்தியில் பார்ப்போரை வசியப்படுத்துவதில் With My Feet தன்னை நிரூபித்துள்ளது. கடந்த 22 ஆண்டு காலமாக With My Feet (2000), With My Feet Through Time (2003), Celebrations (2005), Ensemble (2006), Living Stones (2008), Resurrection (2017), Grace & Glory (2019), Absolute Joy (2022) மற்றும் கொழும்பில் முதன்முறையாக இடம்பெற்ற இரவு விருந்து நடன அரங்க கோட்பாடான Dance Epicure (2023) போன்ற மறக்க முடியாத நிகழ்வுகளை இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் Epic Black நிகழ்வானது இலத்தீன் அமெரிக்க, போல்றூம், சமகால மற்றும் சங்கமம் அடங்கலாக, பல்வகைப்பட்ட நடனப் பாணிகளை கண்ணைக்கவரும் வகையில் காட்சிப்படுத்த சர்வதேசரீதியான அங்கீகாரம் பெற்ற திறமைசாலிகளைக் கொண்ட குழுவால் வழங்கப்படும். ஐக்கிய இராஜ்ஜியத்தில் ஐந்து தடவைகளாக தோற்கடிக்கப்பட முடியாத தேசிய வெற்றியாளர்களாக முடிசூடிய Gunnar Gunnarssonமற்றும் Blackpool Open Smooth Champion ஆன Manuja Hughes ஆகியோரின் நிகழ்வுகள் இதன் சிறப்பம்சமாகும். அத்துடன், தொழில்சார் போல்றூம் ஐரோப்பிய வெற்றியாளர்கள் மற்றும் தொழில்சார் உலக வெற்றியாளர்களான Roman Sukhomlynமற்றும் Jackie Stevenson ஆகியோரும் மேடையை அலங்கரிக்கவுள்ளனர். தமது மகத்தான திறமைகள் மற்றும் தொழில்நுட்ப திறன் ஆகியவற்றுக்காக இவர்கள் மிகவும் பிரபலமானவர்கள் என்பதுடன், கொழும்பின் பார்வையாளர்களை நிச்சயமாக வசீகரிக்கும் வண்ணம் நிகழ்வுகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாழ்வின் பயணம் மற்றும் மாற்றங்களை குறிக்கும் வகையில், ‘from darkness to light’ (இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு) எனும் தொனிப்பொருளில் Epic Blackநிகழ்வு அமையவுள்ளது. இசை, உடைகள் மற்றும் மேடைக்கலை என தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் இந்த எண்ணக்கரு நுணுக்கமாகப் பின்னப்பட்டுள்ளது. நயோமி இராஜரட்ணத்தின் தனித்துவமான நடன ஒழுங்கமைப்பு, நடனம் மற்றும் சிக்கலான, அந்தரத்தில் தூக்குதல், சுழலுதல் மற்றும் திருப்பங்கள் போன்ற காட்சிகள் புகழ்பெற்ற அம்சமாக விளங்குவதோடு, பார்வையாளர்களை பிரமிப்பூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயோமி இராஜரட்ணம் அவர்களின் தூரநோக்கு மேடைக்கும் அப்பாற்பட்டது. உள்நாட்டிலும், வெளிநாட்டு மேடைகளிலும் பிரகாசிப்பதற்கு, கிராமப்புறங்களிலுள்ள திறமைசாலிகளை வளர்க்கும் வாய்ப்புக்களை வழங்கி, இலங்கையில் நடனத்தை வளர்ப்பதிலும் அவர் அர்ப்பணிப்புடன் உள்ளார். சமூக நற்காரியங்கள் மீதும் அவர் அயராத அர்ப்பணிப்புக் கொண்டுள்ளார். அந்த வகையில், அவரது கடந்தகால Epic Black நிகழ்வுகளைப் போலவே, இம்முறையும் திரட்டப்படும் நிதியில் கணிசமான பங்கு வெலிசறை தேவ் சிரி செவன முதியோர் இல்லத்திற்கு வழங்கப்படும். இன, மத வேறுபாடின்றி முதியோருக்கு இலவச அனுமதி மற்றும் கவனிப்பை இந்த இல்லம் வழங்கி வருகின்றது.
இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து நயோமி இராஜரட்ணம் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “Epic Black என்பது வாழ்க்கை மற்றும் நெகிழ்ச்சின் கொண்டாட்டம். எமது நிகழ்வுகள் மூலமாக எம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயுள்ள பிரகாசத்தைக் கொண்டாடி, வாழ்வின் இயற்கைச் சுழற்சியைப் போற்றுவதே எமது நோக்கம். இந்நிகழ்வின் மூலமாக, எனது வாழ்வுக்கும், With My Feet இலுள்ள எம் அனைவருக்கும் பலத்தின் தூணாக விளங்கிய எனது கணவர் ட்ரெவோர் இராஜரட்ணம் அவர்களின் epidTf;$wவிரும்புகின்றோம். நடனம் மீது அவர் கொண்டிருந்த பெரும் பற்று மற்றும் அவரது வாழ்க்கை வாழ்வில் இருள்சூழ்கின்ற தருணங்களிலும் ஒளியைக் கண்டறியும் உத்வேகத்தை எமக்கு அளிப்பதுடன், நாம் வழங்கவுள்ள நிகழ்ச்சியின் மூலமாக பார்வையாளர்களும் அதனை வழங்க முடியும் என நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.
இம்முறை Epic Black நிகழ்வை இலங்கையிலும், அதற்கு வெளியிலும் விசாலயமான அளவில் பிரபலத்தை எட்டியுள்ள புதிய, திறமைமிக்க அணி நிர்வகிக்கவுள்ளது. உலகப்புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் மேடையை அலங்கரிக்கவுள்ள நிலையில், இந்நிகழ்வு மீண்டும் ஒரு முறை சர்வதேச அளவில் பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளதுடன், அதனை சமாளிப்பதற்காக டிஜிட்டல் இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
யூனியன் அசூரன்ஸ் நிறுவனம் இந்நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை வழங்குவதுடன், SriLankan Airlines, Cinnamon Grand Colombo,Warehouse Project, Maliban Biscuits, SOZO, Mackinnons Travels, South Beach Weligama, Elephant House, Shangdong Chinese Kitchen, Dimitri Crusz Photography ஆகியனவும் ஏனைய அனுசரணையாளர்களாக இணைந்துள்ளன. அச்சு ஊடக அனுசரணையாளராக விஜய பத்திரிகை குழுமமும் (Wijeya Publications), இலத்திரனியல் ஊடக அனுசரணையாளராக Sun FMஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் (ABC) செயல்படுகின்றன.
டிக்கட்டுக்களைப் பெற அல்லது ஏனைய விசாரணைகளுக்கு www.withmyfeet.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள். அல்லது 077 775 0786 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக குஷான் செனவிரட்ன அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM