நாடு மீண்டும் ஓர் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதைத் தடுப்பதே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தின் பிரதான நோக்கம் - ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர்

05 Jul, 2024 | 11:50 PM
image

(நா.தனுஜா)

பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் அதேவேளை, நாட்டுமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல், பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல், நாடு மீண்டும் இவ்வாறானதொரு நெருக்கடிக்கு முகங்கொடுக்காதிருப்பதை உறுதிப்படுத்தல் என்பனவே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தின் பிரதான நோக்கங்களாகும் என ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன்மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்டு, அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 

ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் சுமார் 60 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தயாரிப்பு நிலையிலுள்ள சட்ட வரைபுகளும் அவற்றில் உள்ளடங்கும். இவற்றுள் 30 க்கும் மேற்பட்டவை பொருளாதாரத்துறை சார்ந்த சட்டமூலங்களாகும். புதிய மத்திய வங்கிச்சட்டம், கடன் முகாமைத்துவச்சட்டம், பொதுநிதி முகாமைத்துவச் சட்டமூலம், கொள்முதல் முகாமைத்துவ சட்டவரைபு, அரச நிறுவன முகாமைத்துவ சட்டவரைபு என்பன அவற்றில் சிலவாகும். 

அதன்படி தற்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் மிகமுக்கியமான இலக்குகளை உள்ளடக்கியிருக்கின்றது. இலங்கை 100 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும்போது அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கவேண்டும் என்ற இலக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. 

அந்த இலக்கை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கும் இவ்வரைபானது பொருளாதாரக்காரணிகள், காலநிலை மற்றும் பூகோளக்காரணிகள் உள்ளிட்ட சகல கூறுகளையும் உள்ளடக்கியிருக்கின்றது. அதேபோன்று இலங்கை மிகக்குறுகிய பொருளாதாரத்தைக்கொண்ட நாடாகும். எனவே இங்கு செயற்திறன்மிக்க வளப்பயன்பாட்டை உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் காணப்படுவதனால், அதுசார்ந்த விடயங்களும் இச்சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 

அதுமாத்திரமன்றி நாம் நாடு என்ற ரீதியில் பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதெனில் விசேட கவனம் செலுத்தவேண்டிய விடயப்பரப்புகள், கொள்கைகள் மற்றும் அவற்றை அடிப்படையாகக்கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இலக்குகள், முதலீடுகள் மற்றும் அவற்றுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள், சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட 3 பிரதான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகள், தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்தல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடைமுறைக்கணக்கு மீதியின் பெறுமதி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதி பொருட்கள், சேவைகளின் பெறுமதி, தேறிய நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் பெறுமதி, அரசாங்க வரவு - செலவுத்திட்டத்தில் ஆரம்ப மீது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க வருமானம், பல்பரிமாண வறுமையைக் குறைந்த மட்டத்துக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் என்பனவும் இச்சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. 

கடந்த சில வருடகாலங்களில் உலகளாவிய ரீதியில் மிகக்குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கின்றது. இதனை மாற்றியமைப்பதற்கும், குறைந்த வருமானத்தினால் தீவிரமடைந்துள்ள வறுமை நிலையைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகள் பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இந்நடவடிக்கைகளின் ஊடாக பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் அதேவேளை, நாட்டுமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல், பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல், நாடு மீண்டும் இவ்வாறானதொரு நெருக்கடிக்கு முகங்கொடுக்காதிருப்பதை உறுதிப்படுத்தல் என்பனவே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தின் பிரதான நோக்கங்களாகும் எனத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படத்திலிருக்கும் பெண்ணைக் கண்டால் பொலிஸாரிடம் அறிவியுங்கள்...

2024-09-18 17:27:40
news-image

ஏற்கக்கூடிய அரசாங்கத்தை அணுகாமைக்கான மூன்று காரணங்களை...

2024-09-18 17:24:16
news-image

நாவுலவில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

2024-09-18 16:55:20
news-image

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகை பணத்தைத்...

2024-09-18 17:04:53
news-image

சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை -...

2024-09-18 17:01:48
news-image

மக்கள் ஜனாதிபதி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை...

2024-09-18 16:30:03
news-image

தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது ;...

2024-09-18 16:51:03
news-image

வீணடிக்காமல் வாக்குகளை பயன்படுத்துங்கள் - சஜித்  

2024-09-18 16:47:17
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும்...

2024-09-18 16:42:11
news-image

வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை எமது...

2024-09-18 16:11:58
news-image

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம்...

2024-09-18 17:05:23
news-image

வாக்களிப்பது எப்படி ?

2024-09-18 16:22:03