மலேசியாவில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை (04) விமான பராமரிப்பு பகுதியில் இரசாயனக் கசிவு ஏற்பட்டதில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலுள்ள விமான பராமரிப்பு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை இரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது.
பயணிகள் முனையத்தில் இருந்து தனித்தனியாக இருக்கும் விமான பராமரிப்பு பகுதியில் இயங்கும் மூன்று நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் இரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
39 பேருக்கு தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. அதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெத்தில் மெர்காப்டன் என்ற இரசாயனமே கசிந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவில் வாசனைக்காக சேரக்கப்படுகிறது. விமான பராமரிப்பு பகுதியிலுள்ள பயன்படுத்தப்படாத தொட்டியில் இருந்து மெத்தில் மெர்காப்டன் கசிந்துள்ளது.
கசிவு சீர் செய்யப்பட்டு தொட்டி அகற்றப்படும் என தீயணைப்பு பிரவு தெரிவித்துள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM