மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; 4 உரிமையாளர்கள் உட்பட 11 பெண்கள் கைது!

05 Jul, 2024 | 11:54 AM
image

பொலன்னறுவை ஹபரணை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு விபச்சார விடுதிகளை பொலிஸார்  சுற்றிவளைத்த போது நான்கு உரிமையாளர்கள் உட்பட 11 பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட நான்கு  உரிமையாளர்களும் மொனராகலை , சிகிரியா, கம்பஹா, மஹியங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும்,  அவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

அத்துடன் கைது செய்யப்பட்ட 11 பெண்கள் திம்புலாகல தலுகன, ஹபரணை, களனி, மொனராகலை, புனானை,  அநுராதபுரம் மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 19, 27, 33, 47, 33,48 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் .  

கைது செய்யப்பட்ட  உரிமையாளர்கள் இந்த 11 பெண்களுக்கும் குறைந்த பணத்தை வழங்கி அதிக பணம் சம்பாதித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இந்த மசாஜ் நிலையங்கள் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34