சம்பந்தன் போன்ற அகிம்சைவழி தலைவரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு; 13 ஆவது திருத்தத்தை அனைத்துக் கட்சிகளும் நடைமுறைப்படுத்தவேண்டும் - கரு ஜயசூரிய

Published By: Vishnu

05 Jul, 2024 | 02:30 AM
image

(நா.தனுஜா)

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நமது பொறுப்பைக் கருத்திற்கொள்கையில் சம்பந்தன் போன்ற உன்னத, அகிம்சைவழி தலைவரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும். இவ்வேளையில் நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வை எமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. மாறாக நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு மதிப்பளித்து, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவையொட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை உருவாக்கிய தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரான இரா.சம்பந்தன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒட்டுமொத்த தேசத்திடமிருந்தும் விடைபெறவுள்ளார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள்மீது அபரிமிதமான அன்புடனும், அனைத்து இனங்களும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பினார்.

 சம்பந்தனின் அரசியல் செயற்பாடுகளை அவதானிக்கையில் நாட்டின் மிகமுக்கிய பல அத்தியாயங்களில் அவர் பங்களிப்பு வழங்கியுள்ளார். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னரான தொடக்க கால தமிழ்த்தேசிய நடவடிக்கைகளிலும், அதன் பின்னரான வட, கிழக்கு மாகாணங்களை மையமாகக்கொண்டு இடம்பெற்ற யுத்தத்துக்கு சூழல் வகுத்த யுகத்திலும், யுத்தம் முடிவடைந்த தற்போதைய காலப்பகுதியிலும் அவரது வகிபாகம் மாண்புடையதாக அமைந்திருந்தது.

வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகமுக்கிய அரசியல் ஓட்டத்துக்குத் தலைமை தாங்கியவரும், இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வகித்தவருமான சம்பந்தன் தேசத்திடமிருந்து விடைபெறும் இந்நேரத்தில் இலங்கையர்களாகிய நாம் கவனம் செலுத்தவேண்டிய பல முக்கிய விடயங்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம்.

 பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் இந்த நாட்டின் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டனர். ஆனால் சுதந்திரமடைந்த பின்னரான 76 ஆண்டுகளில் நாட்டில் வாழும் இனக்குழுக்களுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையை முழுமையாக உறுதிசெய்யத் தவறிவிட்டோம்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நமது பொறுப்பைக் கருத்திற்கொள்கையில் சம்பந்தன் போன்ற உன்னத, அகிம்சைவழி தலைவரை இழந்தது நாட்டுக்குப் பேரிழப்பாகும். ஆனால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் காண்பித்த அர்ப்பணிப்பைப் பாராட்டி, ஒன்றுபட்ட தேசம் தொடர்பான எமது அபிலாஷைகளைக் கைவிடாமல் முன்நோக்கிச் செல்வதன் ஊடாக நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது நமது பொறுப்பாகும்.

 அதன்படி இந்நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வை எமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு மதிப்பளித்து, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் விசேட கவனம்செலுத்தி ஒற்றுமையுடன் இதனை நிறைவேற்றவேண்டும். ஒரு சகாப்தத்தை அடையாளப்படுத்திய இரா.சம்பந்தன் நம்மைவிட்டு விடைபெற்றிருக்கும் இத்தருணத்தில் அதற்காக ஒட்டுமொத்த தேசமும் உறுதிபூணவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவுலவில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

2024-09-18 16:55:20
news-image

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகை பணத்தைத்...

2024-09-18 17:04:53
news-image

சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை -...

2024-09-18 17:01:48
news-image

மக்கள் ஜனாதிபதி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை...

2024-09-18 16:30:03
news-image

தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது ;...

2024-09-18 16:51:03
news-image

வீணடிக்காமல் வாக்குகளை பயன்படுத்துங்கள் - சஜித்  

2024-09-18 16:47:17
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும்...

2024-09-18 16:42:11
news-image

வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை எமது...

2024-09-18 16:11:58
news-image

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம்...

2024-09-18 17:05:23
news-image

வாக்களிப்பது எப்படி ?

2024-09-18 16:22:03
news-image

மாத்தறையில் 10 வாள்களுடன் ஒருவர் கைது

2024-09-18 16:05:42
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எக்கானமி வகுப்பில் உணவை...

2024-09-18 16:47:43