நடிகர் ஸ்ரீ காந்த் நடிக்கும் 'மாய புத்தகம்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 7

04 Jul, 2024 | 05:12 PM
image

நடிகர் ஸ்ரீ காந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மாய புத்தகம்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ரமா ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மாய புத்தகம்' எனும் திரைப்படத்தில் ஸ்ரீ காந்த், அசோக், இளவரசு, 'ஆடுகளம்' நரேன், அபர்னதி, லோகேஷ், கே. எஸ். ஜி. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி விஜய் ஆனந்த் இசையமைத்திருக்கிறார்.‌ ஹாரர் திரில்லர் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை ஜாக்குவார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி. வினோத் ஜெயின் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்த இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படம் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது. 

அமானுஷ்யம்- பேய்- ஆவி- தொடர்பான திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பு இருப்பதால் வணிக ரீதியாக குறைந்தபட்ச அளவிலாவது வெற்றியை பெரும் எனும் நம்பிக்கையுடன் படக்குழுவினர் வெளியிடுகிறார்கள்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38
news-image

நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின்...

2025-01-16 17:03:46
news-image

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த விஜய் சேதுபதி...

2025-01-16 16:49:05
news-image

நடிகர் 'கெத்து' தினேஷ் நடிக்கும் 'கருப்பு...

2025-01-16 17:41:35
news-image

காதலர் தினத்தன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின்...

2025-01-16 16:45:44
news-image

கத்திக்குத்து தாக்குதல் ; நடிகர் சயிப்...

2025-01-16 16:49:31
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'காதி' படத்தின்...

2025-01-16 15:16:23
news-image

நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்...

2025-01-16 11:06:42
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா' படத்தின்...

2025-01-15 18:23:14
news-image

கவனம் ஈர்க்கும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'...

2025-01-15 18:18:10
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2'

2025-01-15 18:13:55