பண வரவை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகள்...!?

Published By: Digital Desk 7

04 Jul, 2024 | 04:37 PM
image

மனிதர்களான நாம் உணவு -உடை- உறையுள் - என்பதற்காக நாளாந்தம் உழைத்து பொருளீட்டுகிறோம். அனைவராலும் சமமாக பொருளீட்ட முடிவதில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த பணியை செய்து அதனூடாக பொருளீட்டுகிறார்கள். இருப்பினும் பொருளின் தேவை அதாவது பணத்தின் தேவை என்பது எப்போதும் மனிதர்களுக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. கைகளில் நூறு ரூபாய் இருந்தால் அவர்களின் செலவு ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

நம் கைகளில் ஆயிரம் ரூபாயாக இருந்தால் செலவு லட்சக்கணக்கில் இருக்கும். லட்சக்கணக்கில் எம்மிடம் பணமிருந்தால் எமக்கான செலவு கோடி கணக்கில் இருக்கும். இதனால் அனைவருக்கும் பண தேவை என்பது வற்றாது நீடித்துக் கொண்டே இருக்கும். இதனால் எம்மில் பலரும் பணத்தைத் தேடி நாளாந்தம் பயணிக்கிறார்கள். இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் மற்றும் ஜோதிட நிபுணர்கள் தங்கு தடையில்லாமல் பணம் வர வேண்டும் என்றால்  அதற்கென பிரத்யேகமாக பல எளிய வழிமுறைகளையும், பயனுள்ள குறிப்புகளையும் வழங்கியிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை தொடர்ந்து காண்போம்.

பசுவிற்கு கோதுமை மாவினால் செய்யப்பட்ட சப்பாத்தி, எள்ளு மிட்டாய் , எள்ளு உருண்டை, பொரி உருண்டை, கடலை மிட்டாய், அகத்திக்கீரை, அருகம்புல், வாழைப்பழம் ஆகியவற்றை நாளாந்தம் வழங்கினாலும், உங்களுடைய பண வரவில் எந்தத் தட்டுப்பாடும் இருக்காது. தொடர்ந்து நீடிக்கும்.‌ பண வரவு படிப்படியாக உயரும்.‌

பிரதோஷ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அந்த தருணத்தில் பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்த உணவை நிவேதனத்திற்கு படைத்து, அதை பிரசாதமாக தரலாம்.

வெளியில் செல்லும்போது எப்பொழுதும் உங்களுடைய மணி பர்ஸ்ஸில் சிறிதளவாவது பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள்.நேர் நிலையான ஆற்றல் கொண்ட வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள்.

வெள்ளிக்கிழமைகளில் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை உள்ள சுக்கிர ஓரையில்  ஒரு மஞ்சள் துணியில் ஐந்து ஜாதி காய்களை வைத்து முடிச்சிட்டு, அதற்கு மணமுள்ள ஊதுபத்தி புகையை காட்டி, பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உங்களுடைய பணப்பெட்டிக்குள் அந்த முடிச்சினை வைத்து விடுங்கள். பண வரவு அதிகரிக்கும்.

உங்களுடைய பணப்பெட்டியில் எப்போதும் பதினோராயிரம் ரூபாயை வைத்திருக்க வேண்டும். எந்த கடினமான அல்லது நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் இந்த ரூபாயை எடுத்து செலவழிக்க கூடாது. இந்தத் தருணத்தில் எம்மில் பலரும் தற்போது டிஜிட்டல் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால் கைகளில் ரூபாய் நோட்டுகள் இல்லை. ஆனால் எங்களுடைய வங்கிக் கணக்கில் பதினோராயிரம் ரூபாய் இருக்கிறது என்பார்கள்.

இவர்களுக்கு வீட்டுக் கடன், வாகன கடன், இலத்திரனியல் சாதன கடன் உள்ளிட்ட கடனுக்கான தவணை தொகை டிஜிற்றலில் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த கடன் சுமை ஆயுள் முழுவதும் தொடரும். அதே தருணத்தில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் இருப்பதைவிட உங்களது பணப் பெட்டியில் பதினோராயிரம் ரூபாய் இருந்தால் பண வரவில் எந்த குறையும் இருக்காது என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். 

மேலும் பண பரிவர்த்தனைகளை  டிஜிற்றல் மூலமாக மேற்கொள்வதை விட, நேரடியாக வங்கிகளுக்குச் சென்று காசோலை மூலமாகவோ அல்லது வரைவோலை மூலமாகவோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, குருவின் ஆதிக்கமும், ஆசியும் கிடைக்க பெற்று பண வரவு தங்கு தடையில்லாமல் அதிகரிப்பதை காண்பீர்கள்.

மூன்று ஜாதிக்காய், ஒன்பது விரலி மஞ்சள், ஒரு பித்தளையினாலான தாம்பாள தட்டு, ஒரு கோப்பை கல் உப்பு, ஒரு அகல் விளக்கு, பசு நெய், தாமரைத் தண்டு திரி, ஒரு எலுமிச்சை பழம், ஒரு ரூபாய் நாணயம் ஆகிய பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை உள்ள சுக்கிர ஓரையில் சுத்தப்படுத்திய பித்தளை தாம்பாள தட்டில் கல் உப்பை வைத்து அதன் மீது ஒன்பது விரலி மஞ்சளையும் நெட்டு குத்தாக வைக்க வேண்டும்.

விளக்கின் இரண்டு புறங்களிலும் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, அதில் ஒரு பகுதியை குங்குமத்தாலும், மற்றொரு பகுதியை மஞ்சளாலும் பூசி வைத்து விட வேண்டும். பசு நெய்யால் விளக்கேற்றுங்கள்.‌ கல்லுப்பின் மீது ஒரு ரூபாய் நாணயத்தையும், மூன்று ஜாதிக்காயையும் வைத்து விடுங்கள். அந்த ஏற்றிய தீபத்திற்கு முன்னால் உங்களுடைய பணத் தேவையை விரிவாகவும், ஒரு முகமாகவும் விளக்கிடுங்கள். இந்த எளிய பரிகாரத்தை தொடர்ச்சியாக ஆறு வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சம் உங்களது கோரிக்கையை கேட்டு அதற்கான வழிமுறையை ஏற்படுத்தி உங்களிடத்தில் நீங்கள் கேட்ட தொகையை கொண்டு வந்து சேர்க்கும்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-02-13 15:34:12
news-image

ஆரோக்கியம் மேம்படுவதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-02-12 17:06:58
news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19