(ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னரே சட்ட மா அதிபரினால் விசாரணைகளை ஆரம்பிக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்கான விசாரணை எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதனை தற்போதைக்கு கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிரணி எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே எழுப்பவிருந்த கேள்வியை பந்துல குணவர்தன எம்.பி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.