நான்ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் எனும் கொழுப்பு கல்லீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

05 Jul, 2024 | 12:50 AM
image

எம்மில் சிலர் சுறுசுறுப்பே இல்லாமல் எப்போதும் சோர்வாக காணப்படுவார்கள். காரணமே இல்லாமல் திடீரென்று அவர்களின் உடல் எடை குறையும். வலது புற வயிற்றின் மேல் பகுதியில் வலி தொடர்ச்சியாகவோ அல்லது விட்டு விட்டோ இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என உணர்ந்து கொண்டு, உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்மில் பலரும் தற்போதைய சூழலில் முழு உடல் பரிசோதனையை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் முடிவுகளில் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருப்பதாக குறிப்பிடுவர். அதாவது நான் ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என பொருள்.  உடனே எம்மில் சிலர் மது அருந்துபவர்களுக்கு தானே கல்லீரலில் பாதிப்பு ஏற்படும். எமக்கு மது அருந்து பழக்கம் இல்லையே..!  பிறகு ஏன்? என சந்தேகத்தை எழுப்பவர். மது அருந்தாதவர்களுக்கும், அவர்களுடைய உணவு முறை, அவர்கள் பசியாறும் உணவுகள் ஆரோக்கியமற்றதாகவும், உடல் நலத்திற்கு எதிரானதாகவும் இருந்தாலும் குறிப்பாக துரித உணவுகள் பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் உணவுகள் உங்களது கல்லீரல் பாதிப்பு ஏற்படும். இத்தகைய ஆரோக்கியமற்ற உணவினை உண்பதால் உங்களது கல்லீரல் பகுதியில் கொழுப்பு சேகரமாவதுடன் அவை கல்லீரலில் செல்களை சேதப்படுத்தி பாதிப்பை உண்டாக்குகிறது.

கல்லீரலில் கொழுப்பு படிந்திருக்கும் ஆனால் பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறியையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சிலருக்கு இத்தகைய கொழுப்பு வீக்கத்தை ஏற்படுத்தி கல்லீரலில் உள்ள செல்களை சேதப்படுத்துகிறது. இதனால் கல்லீரலின் செயல் திறன் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு, வடுவை உண்டாக்கி கல்லீரல் சுருக்க பாதிப்பை நாளடைவில் ஏற்படுத்துகிறது.

உடற்பருமன், நீரிழிவு நோயாளிகள், உயர் கொழுப்பு அளவு, வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி ஆகிய காரணங்களால் நாற்பது வயதிலிருந்து ஐம்பது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் இத்தகைய கல்லீரல் கொழுப்பு பாதிப்பு ஏற்படுகிறது.

இதன் போது வைத்தியர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், குருதி பரிசோதனை, கல்லீரல் திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பர். பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். இந்தத் தருணத்தில் உங்களுடைய உடலில் உள்ள கொழுப்புகளின் அளவுகளை குறைப்பதற்கான சிகிச்சைகளை பரிந்துரைப்பர். இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். மேலும் இதன் போது உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, உணவு முறை, வாழ்க்கை நடைமுறை ஆகியவை பற்றியும் வைத்தியர்களின் அறிவுரையை பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வைத்தியர் முத்துக்குமார்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மியூகோசிடிஸ் எனும் சளி வீக்க பாதிப்பிற்குரிய...

2024-07-23 14:35:47
news-image

எதிர்மறை எண்ணங்களை அகற்ற உதவும் நரம்பியல்...

2024-07-22 17:19:21
news-image

பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ்...

2024-07-20 18:21:12
news-image

நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவது...

2024-07-19 17:33:29
news-image

கல்லீரல் சுருக்க பாதிப்பால் உண்டாகும் ரத்த...

2024-07-19 17:27:13
news-image

ஃபிஸர் எனும் ஆசன வாய் வெடிப்பு...

2024-07-17 17:23:03
news-image

கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன...

2024-07-16 14:41:29
news-image

முடி அகற்றுவதற்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2024-07-15 17:07:51
news-image

பிளெபரோபிளாஸ்ரி எனும் கண் இமைகளின் அழகிற்கான...

2024-07-13 10:33:23
news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59