மலேசியா தாமான் லோட் 6892 ஜலான் ஹஜி செந்தோசா காப்பார் சிலாங்கூர் தேவி ஸ்ரீ காப்பாரூர் ஆதிபராசக்தி ஆலய நூதன புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறவுள்ளது.
ஜூலை 8ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, பிரதிஷ்ட மகா சங்கல்பம், கோபுர கலச ஸ்தாபனம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை நடைபெற்று, விபூதி பிரசாதம் வழங்கப்படும்.
09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ லலிதா ஹோமம், புனித மண் எடுத்தல், புனித தீர்த்தம் எடுத்தலை தொடர்ந்து, அன்றைய தினம் மாலை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், முதற்கால யாக பூஜை, ஆதிபராசக்தி மந்திர நூல் பாராயணங்கள் இடம்பெறும்.
10ஆம் திகதி புதன்கிழமை காலை பக்தர்கள் சுவாமி பீடங்களின் வெள்ளி, தங்கம், நவரத்தினம் வைத்தலும் அன்றைய தினம் மாலை வேளையில் நவரத்ன ஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், சுவாமி ஸ்தாபனம், அஷ்டபந்தனம் பூரணாகுதி, தீபாராதனையை தொடர்ந்து விபூதிப் பிரசாதம் வழங்கப்படும்.
11ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்துதல், பிராயச்சித்த அபிஷேகம், பிம்ப சுத்தி ரக்ஷாபந்தனம் நடைபெறும்.
12ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாக வேள்வி, வேதம், திருமறை பாராயணங்கள், காலை 10:20 மணிக்கு தேவி ஸ்ரீ காப்பாரூர் அன்னை ஆதிபராசக்தி மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கோபுர கலசங்களுக்குமான மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறும்.
அதனை தொடர்ந்து, மகேஷ்வர பூஜையினை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு மகா கும்பாபிஷேக பெருவிழா இனிதே நிறைவுபெறும்.
கும்பாபிஷேக கிரியைகள் அனைத்தும் இரத்தினபுரி மாவட்டத்தின் டேனகந்த அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ உஷாங்கன் சர்மா தலைமையில் நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM