வட, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம் - சஜித்

04 Jul, 2024 | 12:57 PM
image

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு மிகக் குறைவான மட்டத்திலேயே காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42 வீத பங்களிப்பை வழங்கி வருகிறது. மீதமுள்ள 58 வீத பங்களிப்பை ஏனைய 8 மாகாணங்களும் வழங்கி வருகின்றன. கிழக்கு மாகாணம் 5 வீதத்துக்கும் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உலகில் பல நாடுகள் யுத்தம் முடிவடைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாடுகளை நடத்திய போதிலும், எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்து இன்று வரையில் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அன்று தொடக்கம் இன்று வரையுள்ள எந்தத் தலைவராலும் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்ட முடியவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் மையப்படுத்தி நாடு தழுவிய சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நாம் நடத்துவோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 281ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மட்டக்களப்பு, கல்குடா, ஏறாவூர் அல்-முனீரா மகளிர் கல்லூரி வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (03) நடைபெற்றது.

இதன்போது, பாடசாலை நூலகத்துக்குத் தேவையான ஆங்கில நூல்களை கொள்வனவு செய்துகொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

இந்த 2 மாகாணங்களிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் போர்வீரர்கள் என சமூகத்தில் பல தரப்பினர்  வாழ்ந்து வருகின்றனர். 

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையர்களாக நாம் இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். பிரிவினையை தொடர்ந்தால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. மத அடிப்படையில் இனங்கள் ஒன்றிணைய வேண்டும். இந்த பிரபஞ்சம் செயற்றிட்டத்தின் மூலம் இன, மத, சாதி, வர்க்க, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இவை அனைத்தும் வாய்மொழியாகச் சொல்லப்படுவது போலவே செயல்படுத்துவேன். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் என்ற வகையில் வடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடாத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரிவிலும் கிராமங்களிலும் அபிவிருத்தி அலகுகளை நிறுவுவேன். 

ஜனாதிபதி என்ற வகையில் e governance ஊடாக இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்து வினைதிறனான நிர்வாகத்தை முன்னெடுப்பேன் என்றார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநித்துவப்படுத்தும் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் புதல்வர் அம்ஜாட் மௌலானா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ்  ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு...

2026-01-24 14:45:23
news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03