(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட அகதிகள் அணியை உருவாக்க உதவுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண்கள் அணி உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2010இல் உருவாக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்கள் அணி 2021இல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கலைக்கப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், விளையாட்டுகளில் இருந்து பெண்களை தலிபான் தடைசெய்தது. அத்துடன் விட்டுவிடாமால் வீராங்கனைகளின் வீடுகளில் தலிபான் சோதனையை நடத்தி அவர்களை இம்சை படுத்தியிருந்தது.
தமது அமைப்பில் முழு அந்தஸ்துடைய உறுப்பு நாடுகள் தேசிய பெண்கள் அணி ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்பது ஐசிசியின் நியதியாகும். ஆனால், ஆப்கானிஸ்தானில் ஆண்கள் அணி இருக்கின்றபோதிலும் பெண்கள் அணி இல்லை.
சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான், கடந்த வாரம் நிறைவடைந்த 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அரை இறுதிவரை வீறுநடை போட்டிருந்தது.
'ஆப்கானிஸ்தான் அகதிகள் அணியை அமைப்பதன் மூலம் எங்களுக்கு விளையாடவும் பயிற்சி அளிக்கவும் எல்லைகள் அற்ற ஒரு கிரிக்கெட் அணியை நிருவகிக்கவும் வாய்ப்பு உருவாகும்' என ஐசிசி தலைவர் க்ரெக் பாக்லேவுக்கு ஆனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஆப்கான் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'இந்த அணி அமைக்கப்படுவதன் மூலம் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் சகல ஆப்கானிஸ்தான் பெண்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர உதவும்' என அவர்கள் தங்களது கோரிக்கை கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியினால் தலிபான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் பெண்கள் அணி உருவாக்கப்பட்டது.
எவ்வாறாயினும், பெண்கள் அணிக்கு தலிபானியர்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சர்வதேச போட்டிகளில் விளையாட அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தடை விதித்தது.
எனினும், 2020இல் 25 கிரிக்கெட் வீராங்கனைகளை ஒப்பந்த அடிப்படையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இணைத்துக்கொண்டிருந்தது.
எவ்வாறாயினும் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு திரும்பவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர்வரை மகளிர் சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பங்குபற்றுவதற்கான எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் பெண்கள் அணியைச் சேர்ந்த 20க்கம் மேற்பட்ட வீராங்கனைகள் நாட்டைவிட்டு வெளியேறி தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந் நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் தங்களுக்கு அகதி அந்தஸ்து அணி ஒன்றை அமைக்க உதவுமாறு ஐசிசியிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
'இந்த அணியைக் கொண்டு ஆப்கானிஸ்தான் பெண்கள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே எமது நோக்கம். ஆனால், ஆப்கானிஸ்தானில் விளையாட முடியாத நிலை இருக்கிறது.
'எங்களது திறமையை வளர்த்து அதனை வெளிப்படுத்துவதே அகதிகள் அணி ஒன்றைக் கொண்டிருப்பதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்துவரும் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பது மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தவைப்பது என்பனவும் எங்களது நோக்கமாகும்.
'ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணிக்கு வாய்ப்பு கிடைப்பதுபோல், நாங்களும் மிக உயர்ந்த மட்டங்களில் போட்டியிட விரும்புகிறோம். கிரிக்கெட்டை விரும்பும் சிறுமிகள் மற்றும் பெண்களை தொழில்களில் இணைத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் எண்ணியுள்ளோம். அதன் மூலம் ஆப்கானிஸ்தான் பெண்களின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தவும் ஐ.சி.சி.யின் தலைமைத்துவத்தில் நிதி உதவி வழங்கப்பட்டால் சிறந்த வெற்றிகளை ஈட்டி எங்களால் முடியும் என்பதை நிரூபிக்கவும் நாங்கள் காத்திருக்கிறோம்' என ஐசிசிக்கு அவர்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM