கோலாகலமாக இன்று ஆரம்பமான 10 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்களான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில்  இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வொட்ஸன் தலைமையிலான பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தவான் , யுவராஜ், ஹென்றிக்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்கள் பெற்றது.

யுவராஜ் சிங் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 27 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ்  அணிக்கு 208 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.