எம்மில் பலரும் சுப நிகழ்வுகளை நடத்த நல்ல நாள் எது? என்பதை சோதிட நிபுணர்கள் வழியாக தெரிந்து கொண்டு, அன்றைய திகதியில் அதிகாலையில் உள்ள பிரம்ம முகூர்த்த தருணத்தில் மேற்கொள்வது வழக்கம். பொதுவாகவே பிரம்ம முகூர்த்த தருணங்கள் குறித்து எம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து ஆன்மீகத்தில் அதீத நாட்டம் உள்ளவர்கள் நாளாந்தம் இடம்பெறும் அபிஜித் முகூர்த்தம் மற்றும் அபிஜித் நட்சத்திரம் குறித்தும் அறிந்து கொண்டு அந்த தருணத்தில் இறைவழிபாட்டை மேற்கொண்டு சுப பலன்களை பெறுவார்கள். அந்த வகையில் சுப பலன்களை அள்ளித் தருவதில் மற்றொரு சூட்சமமான வழிபாட்டு முறை உள்ளது என ஆன்மீக முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதுதான் கோதூளி முகூர்த்த தருண வழிபாடு..!
இந்த முகூர்த்த தருணம் என்பது நாளாந்தம் சூரிய அஸ்தமனமாகும் தருணத்திற்கு முன் பன்னிரண்டு நிமிடங்கள் மற்றும் சூரிய அஸ்தமனமான பிறகு உள்ள பன்னிரெண்டு நிமிடங்கள் என மொத்தம் இருபத்தி நான்கு நிமிடங்களை கோதூளி முகூர்த்த தருணம் என முன்னோர்கள் வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் பின்னருமாக இடம்பெறும் கோதூளி முகூர்த்த தருணத்தில் கோமாதாவை வணங்க வேண்டும். நீங்கள் இந்தத் தருணத்தில் வீட்டில் இருந்தால் கோமாதாவின் புகைப்படத்திற்கு தூப தீபம் காட்டி, 'ஓம் கோமாதாய நமஹ' எனும் மந்திரத்தை இருபத்தியேழு முறை உச்சரித்து, கோமாதாவிடம் உங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்தால் அவை விரைவில் நிறைவேறி உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதை அனுபவத்தில் காணலாம்.
இந்த தருணத்தில் நீங்கள் வீட்டில் இல்லாமல் வேறு எங்கேயும் இருக்க நேர்ந்தால் வடக்கு திசை நோக்கி கோமாதாவை மனதில் நிறுத்தி, இருபத்தியேழு முறை 'ஓம் கோமாதாய நமஹ' எனும் மந்திரத்தை மனதுள் உச்சரித்து, ஒருமித்த மனதுடன் பிரார்த்திக்க வேண்டும்.
நாம் எம்முடைய சங்க இலக்கியங்களில் கந்தர்வ திருமணம் என்ற ஒரு திருமண வைபவத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்த கந்தர்வ திருமணங்கள் - சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரான பன்னிரண்டு நிமிடங்கள் மற்றும் சூரிய அஸ்தமனமான பின்னரான பன்னிரண்டு நிமிடங்கள் என இருபத்தி நான்கு நிமிடங்கள் ஆக இடம்பெறும் இந்த கோதூளி முகூர்த்த தருணத்தில் தான் நடைபெறும். இன்றும் வட இந்தியாவில் பல்வேறு சமூகத்தினர் இந்த கோதூளி முகூர்த்த தருணத்தில் திருமணங்களை நடத்துகிறார்கள். மேலும் கோமாதாவை தங்களது குலதெய்வமாக கொண்டவர்களும் இந்த கோதூளி முகூர்த்த தருணத்தில் தங்களுடைய சுப நிகழ்வுகளை நடத்துவதை வழக்கத்தில் காணலாம்.
மேலும் உங்களது வீட்டுக்கு அருகில் உள்ள கோமடத்திற்கு சென்று இந்த கோதூளி முகூர்த்த தருணத்தில் பசு மாட்டிற்கு வாழைப்பழம், அகத்திக்கீரை போன்றவற்றை தானமாக வழங்கி பிரார்த்தித்தாலும் உங்களது வேண்டுதல் நிறைவேறும்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM