இம்முறை ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரினால் டுவிட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜிக்களை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமா ஐபிஎல் கோலாகல திருவிழாவின் முதல் போட்டியில் பெங்களூர் –சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக டுவிட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜிக்களை வெளியிட்டுள்ளது. நெட்டிசன்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக்குடன் கிரிக்கெட் வீரர்களின் முழுப் பெயரையும் பதிவு செய்யும் போது வீரர்களின் புகைப்படம் எமோஜிக்களாக தோன்றுகிறது. அதேபோல #IPL என்று பதிவிட்டாலும் ஐபிஎல் எமோஜி தானாகவே தோன்றும்.

நெட்டிசன்களின் பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்தவை எமோஜிக்கள். தற்போது ஐபிஎல் இலும் களைகட்டியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்காக சிறப்பு எமோஜிக்களை டுவிட்டர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.