பன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்' எனும் கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 07ஆம் திகதி- ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு 09, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வகவம் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹூஸைன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் தலைவர் இம்ரான் நெய்னாரின் ஏற்பாட்டில் நிகழவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் வர்த்தக, வாணிப அமைச்சரும் அ.இ.ம.கா. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், விசேட அதிதியாக மீன்பிடித்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்தோடு, கௌரவ அதிதிகளாக சி.பி.எம். ஷியாம் (ரூபவாஹினி கூதா), எம்.எச்.எம். அன்ஸார் (மாஷா பில்டர்ஸ்), எம்.என்.எம், பிஷ்ருல் அமீன் (சட்டத்தரணி), எஸ். ஆர். எம்.எம். இர்ஷாத் (த கிரேட் இன்டியா செய்தித் தளம்), ரகு இந்திரகுமார் (பிஸ்னஸ் வேர்ல்ட் இன்டர்நெஷனல்), மொஹமட் மில்ஹான் (ஜப்பான் லங்கா என்டர்பிரைஸஸ்), கவிஞர் நாச்சியாதீவு பர்வீன், சப்ரின் ரின்ஸா (சக்ஸஸ் குறூப் ஒப் கொலேஜ்), டீன் நூர் கனி (ரவ்ளத் அத்பால் இன்டர்நெஷனல்) ஆகியோர் பங்குகொள்ளவுள்ளனர்.
வரவேற்புரையை கவிஞர் சிமாரா அலியும் வாழ்த்துரையை மாத்தளை எம்.எம். பீர்முகம்மதும் வழங்கவுள்ளனர்.
நூல் பற்றிய உரைகளை எழுத்தாளர் பூர்ணிமா கருணாகரன், கவிஞர் எஸ்.ஏ.சி.பி. மரிக்கார் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். ஆஷிகா பர்ஸான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM