தேசிய இளைஞர் படையணி வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சகவாழ்வு நிகழ்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவு 

03 Jul, 2024 | 03:21 PM
image

இனங்களுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கலாசார பண்புகளை புரிந்துகொள்ளுதல் மற்றும் தொடர்பாடல் பிரச்சினைகளை குறைத்து பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் தேசிய இளைஞர் படையணி இளைஞர் பயிலிளவல்களுக்கு நடத்தப்பட்ட மூன்று நாள் வடக்கு-தெற்கு சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

முதல் நாளன்று திவுலப்பிட்டிய பயிற்சி நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு நிகழ்வு நடைபெற்றதுடன், தெற்கின் அறுஞ்சுவை உணவு மேசை வடக்கிலுள்ள இளைஞர்களின் சுவாரஸ்யமான அம்சமாக இருந்தது. 

இரண்டாம் நாளன்று ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார வரலாற்று அருங்காட்சியகம், தாமரை கோபுரம், விஹாரமஹாதேவி பூங்கா மற்றும் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சிறப்பு இடங்களையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்ததுடன் மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையின் கீழ் மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயகவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பங்குபற்றும் வாய்ப்பும் இளைஞர் பயிலிளவல்களுக்கு கிடைத்தது. 

மூன்றாம் நாள் காலையில் அத்தனகல்ல ரஜமஹா விகாரை, கம்பஹா ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்ற இளைஞர் பயிலிளவல்கள் அன்று மாலை திவுலப்பிட்டிய பயிற்சி நிலையத்தில் கிரிக்கெட் மற்றும் கரப்பந்து விளையாட்டுகளில் கலந்துகொண்டனர். 

அன்றைய தினம் இரவில் தீப்பாசறை மற்றும்  கலாசார நிகழ்ச்சியும் திவுலப்பிட்டி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யூஎஸ்பீ   பீஎஸ்சி ஐஜீ, மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) சட்டத்தரணி நிஷாந்த புஷ்பகுமார, மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், மேல் மாகாண பணிப்பாளர் கேணல் எல்பீ மென்டிஸ் மற்றும் வட மாகாண பணிப்பாளர் கேணல் அமித் லியனகே ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றதுடன் அதில் நிலைய பொறுப்பதிகாரிகள், நிலைய பணியாளர்கள், பிரதம அலுவலக பணியாளர்கள் மற்றும் இளைஞர் பயிலிளவல்கள் இத்திட்டத்தில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ் கழக தலைவராக கலைஞர் சுதாகர்...

2024-07-24 18:48:40
news-image

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி

2024-07-24 17:25:20
news-image

யாழ் மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை...

2024-07-23 15:16:33
news-image

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்...

2024-07-23 12:53:28
news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18