இந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும். 26 கரையோர வலயங்களின் அபிவிருத்திக்கான அடிப்படை வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் இந்த நாட்களில் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துகின்றன.
வனாத்தவில்லு ஆற்றின் வாடி, வனாத்தவில்லு களப்பு தீவு, கல்பிட்டி குடா , கல்பிட்டி வைகால, நீர்கொழும்பு தடாகம், நீர்கொழும்பு கபுங்கொட, வத்தளை பிரிதிபுர, பெந்தோட்ட கடற்கரை, ஹபராதுவ கொக்கல லகூன், திக்வெல்ல சீதாகால்ல, தங்கல்ல ரெகவ லகூன், அம்பலாங்கொடை லூனம் லகூன், ஹம்பாந்தோட்டை மலல லேயாவ, திஸ்ஸமஹாராம கிரிந்த வெலி மலை லாஹுகல குனுக்கல கடற்கரை, பொத்துவில் எலிபெண்ட் ரொக், மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு சல்லதீவு, கிண்ணியா தம்பலகமுவ குடா, திருகோணமலை ஆளுநரின் அலுவலகப் பகுதி, திருகோணமலை உப்புவெளி, திருகோணமலை சம்பல் தீவு, குச்சிவெளி அரிசிமலை முல்லைத்தீவு நாயாறு குடா, முல்லைத்தீவு நந்திக்கடல் குடா, யாழ்ப்பாணம் சென்னக்குளம் கடற்கரை, யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரை ஆகிய கரையோரப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வருடம் இரணைவில, உப்பாறு, கீரிமுண்டலம், மூதூர், காரைதீவு, நிந்தவூர், புஸ்ஸ, தல்தியவத்தை, கொக்கல, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காத்தான்குடி, உஸ்வெட்டகெய்யாவ ஆகிய கரையோரங்களில் 14 அவசரகால கரையோர பாதுகாப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அபிவிருத்திப் பணிகளுக்காக 520 மின் அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வருடம் 30 கடற்கரை துப்புரவு வேலைத்திட்டங்களும் 04 சதுப்புநிலத் தாவரங்கள் நடுகை வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 300 மில்லியன் ரூபா ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM