சாவகச்சேரியில் நாதஸ்வர மேதை கலாநிதி எம். பஞ்சாபிகேசன் நூற்றாண்டு விழா

03 Jul, 2024 | 12:31 PM
image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் 'கலாநிதி' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட நாதஸ்வர மேதை கலாநிதி எம். பஞ்சாபிகேசன் நூற்றாண்டு விழா திங்கட்கிழமை (01) சாவகச்சேரியில் நூற்றுக்கணக்கான இசை ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

மருத்துவர் எஸ்.எஸ். அருளானந்தம் தலைமையிலான இந்நிகழ்வின் சிறப்பம்சமாக சங்கத்தானை இராக்கச்சி அம்மன் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள பஞ்சாபிகேசன் வாழ்ந்த இல்லத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பிரதம விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிலையை திரைநீக்கம் செய்துவைத்தார். 

தொடர்ந்து, இராக்கச்சி அம்மன் ஆலயத்தில் இருந்து பஞ்சாபிகேசனின் திருவுருவப்படம் மங்கலப் பொருட்களுடன் நாற்பதுக்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்களின் மேள வாத்திய இசையுடன் சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

இந்த நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆசியுரையையும் ஆசிரியர் த. பரமானந்தம் தொடக்க உரையையும் ஆற்றினர். 

பேராசிரியர் என். சண்முகலிங்கன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், சட்டத்தரணி கே. சயந்தன், யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் கிருபாசக்தி கருணா ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர். 

நாதஸ்வர இசைக்கலை பற்றிய சிறப்புக் கட்டுரைகளை உள்ளடக்கிய 'எம்.பஞ்சாபிகேசன்' என்ற நூலும் இதன்போது வெளியிடப்பட்டது. 

இதன்போது, நூல் வெளியீட்டுரையை செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் வழங்கினார். 

தொடர்ந்து, மூத்த நாதஸ்வரக் கலைஞர் பிச்சையப்பா ரஜீவன், தவில் கலைஞர் தெட்சணாமூர்த்தி உதயசங்கர் ஆகியோர் பஞ்சாபிகேசன் நினைவு தங்கப்பதக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

அத்தோடு, பஞ்சாபிகேசனுடன் நீண்டகாலம் பணியாற்றிய கலைஞர்களின் வரிசையில் தவில் வித்துவான் ச. முருகையா, நாதஸ்வர வித்துவான் த. கோபாலசாமி ஆகியோர் பொற்கிளி வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

அதனை தொடர்ந்து, புகழ்பூத்த நாதஸ்வர தவில் வித்துவான்கள் பங்கேற்ற இரண்டு கச்சேரிகள், பஞ்சாபிகேசனின் பேர்த்தி இசையாசிரியர் நிருத்திகா சுஜீவனின் வாய்ப்பாட்டுக் கச்சேரி, இந்து கல்லூரி மாணவிகளின் நடனம் என பல கலை நிகழ்வுகள் நடைபெற்றன. 

அதேவேளை, கவிஞர் ச. மார்க்கண்டு கவி வாழ்த்தொன்றையும் வழங்கினர். 

சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந சர்வேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். அதிபர் வை. விஜயகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32