யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய திருகோணமலையைச் சேர்ந்த நால்வர் கைது !

03 Jul, 2024 | 12:03 PM
image

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்திய பஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு இளைஞர்கள் குழு ஒன்று அமைதியின்மையை ஏற்படுத்துவதாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.  

தகவலின் பிரகாரம் பஸ் நிலையத்திற்கு விரைந்த பொலிஸ் குழு அங்கு அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.  

அதன் போது , இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

அதேவேளை, நான்கு இளைஞர்களையும், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை,  கடமைக்கு இடையூறு விளைத்தமை,  பொது இடத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்துள்ளனர்.  

கைதுசெய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23