‘Act Now’ என்பது இலங்கை சுவிஷேசக ஐக்கியத்துவத்தின் ஒரு பிரச்சார அமைப்பாகும். இவ்வமைப்பானது குரலற்ற மக்களின் போராட்டங்களை எடுத்துக்காட்டும் நோக்கில் ‘Uncover’ எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
Act Now 2018ஆம் ஆண்டளவில் ஆக்கபூர்வமான சமூக அரசியல் ஈடுபாட்டை ஊக்குவித்து அவர்களின் ஐனநாயக உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பில் இளைஞர்களை அறிவுறுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது.
கண்காட்சியானது 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கொழும்பு 07, லயனல் வென்ட் கலைமையத்தின் ஹரோல்ட் பீரிஸ் கலையரங்கில் மு.ப 10.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடைபெறும்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திர மீறல்கள், நில அபகரிப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டோர், இராணுவமயமாக்கல் மற்றும் மலையக தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற இலங்கையின் பிரதான ஊடகங்களில் போதுமான அளவில் பேசப்படாததும் பரவலாக ஐனநாயகத்துக்கான அச்சுறுத்தலாக அடையாளம் காணப்படாததுமான விடயங்களை இக்கண்காட்சி முன்னிலைப்படுத்தவுள்ளது.
இக்கண்காட்சியின் தொடக்க நாளான ஜூலை மாதம் 4ஆம் திகதி “நீதியைப் பின்தொடர்தல் : கனவா அல்லது நனவா?” எனும் தலைப்பில் குழு கலந்துரையாடல் இடம்பெறும்.
இக்கலந்துரையாடலில் ‘அம்னெஸ்டி இன்டர்நெஷனல் (Amnesty International) தென் ஆசிய மண்டல ஆய்வாளராக பணியாற்றும் தியாகி ருவன்பத்திரன, ‘அடையாளம் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் அனுஷானி அழகராஜா, சட்டத்தரணி கௌதமன் பாலச்சந்திரன் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும் ‘விகல்ப’வின் ஆசிரியருமான சம்பத் சமரக்கோன் ஆகியோர் கலந்துகொள்வர்.
ஜூலை 5ஆம் திகதி கண்காட்சியில் சோமீதரனின் “தாய் நிலம்” என்னும் ஆவணப்படம் திரையிடப்படும். இக்கண்காட்சியானது ஜூலை மாதம் 8ஆம் திகதி “மலையக தமிழர்களுக்கான நீதி : பாவனையும் அதன் துஷ்பிரயோகமும்" என்னும் தலைப்பிலான கலந்துரையாடலுடன் நிறைவடையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM