சம்பந்தனுக்கு இலங்கை தமிழரசு கட்சி யாழ்ப்பாண தலைமையகத்தில் அஞ்சலி

Published By: Digital Desk 3

03 Jul, 2024 | 08:56 AM
image

(எம்.நியூட்டன்)

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம்  சம்பந்தனுக்கு இலங்கை தமிழரசு கட்சி யாழ்ப்பாண தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (02) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ர நிகழ்வில் அன்னாரின் உருவபடத்திற்கு ஈகைசுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிரேஷ்ட உறுபினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அன்னாரது மறைவை தொடர்ந்து கட்சிகொடி அரைக்கம்பத்தில் பறக் கவிடப்பட்டதுடன் கறுப்பு கொடி, பனர்கள் கட்டப்பட்டு துயரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ்ப்பாண தொகுதி கிளையினரால் விசேட அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20
news-image

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகளும்...

2025-01-15 17:33:04