மிகவும் பரபரப்பான LPL போட்டியில் ஜெவ்னா கிங்ஸை கடைசிப் பந்தில் வெற்றிகொண்டது கோல் மார்வல்ஸ்

Published By: Vishnu

02 Jul, 2024 | 07:54 PM
image

(நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்றைய தினம் கடைசிப் பந்துவரை பரபரப்பை ஏற்படுத்திய ஜெவ்னா கிங்ஸ் அணிக்கும் கோல் மார்வல்ஸ் அணிக்கும் இடையிலான லங்கா பிறீமியர் லீக் போட்டியில் 5 விக்கெட்களால் கோல் மார்வல்ஸ் வெற்றி ஈட்டியது.

178 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவர் நிரோஷன் திக்வெல்ல, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் 43 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

திக்வெல்ல 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சீஃபேர்ட் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் 4 விக்கெட்கள் சரிந்தன.

சீஃபேர்ட் 10 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 13 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 25 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர். (173 - 5 விக்.)

எனினும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 5 ஓட்டங்களை சஹான் ஆராச்சிகேயும் ட்வேன் ப்ரிட்டோரியஸும் பெற்றுக்கொடுக்க கடைசிப் பந்தில் கோல் மார்வல்ஸ் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஜெவ்னா கிங்ஸ், எதிரணியின் மூத்த வீரர் இசுறு உதானவை நையப்புடைத்து 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

குசல் மெண்டிஸ் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோதிலும் பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து ஜெவ்னா கிங்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

பெத்தும் நிஸ்ஸன்க 51 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட அணித் தலைவர் சரித் அசலன்க 33 ஓட்டங்களையம் தனஞ்சய டி சில்வா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஸஹூர் கான் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்வேன் ப்ரிட்டோரியஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இசுறு உதான 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில்...

2026-03-05 23:47:04
news-image

இந்தியாவை பலமான நிலையில் இட்டார் சஞ்சு...

2026-03-05 21:05:12
news-image

ரி20 உலகக் கிண்ண இரண்டாவது அரை...

2026-03-05 18:52:40
news-image

நியூஸிலாந்தை உலகக் கிண்ணப் இறுதிப் போட்டியில்...

2026-03-05 18:38:16
news-image

மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக ...

2026-03-05 17:16:35
news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் :...

2026-03-05 15:21:45
news-image

வடக்கின் போர் ஆரம்பம்

2026-03-05 15:18:36
news-image

ஐசிசியின் இணக்கப்பாட்டுடன் கிரிக்கெட் தொடர்பான அடுத்த...

2026-03-05 12:44:11
news-image

தென் ஆபிரிக்காவை சிதறடித்து ஃபின் அலன்...

2026-03-05 13:26:59
news-image

தென் ஆபிரிக்காவுக்கு கைகொடுத்தார் மார்க்கோ ஜென்சன்,...

2026-03-04 21:26:36
news-image

மேற்கிந்தியத் தீவுகளில் இரண்டு வகை கிரிக்கெட்...

2026-03-04 20:56:50
news-image

கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2026

2026-03-04 18:44:04