அயலகத்தில் வாழ்பவர்கள் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான வழிமுறை...?

Published By: Digital Desk 7

02 Jul, 2024 | 11:38 PM
image

எம்முடைய மண்ணில் இருந்து பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்து அயல் தேசத்தில் வசிப்பவர்கள் பொருளாதார நிலையில் மேம்பட்டிருந்தாலும் அவர்கள் தங்களுடைய மனரீதியாக குறைகளுடனே வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்காதது காரணம் என தெளிவாக சொல்லலாம். புலம் பெயர்ந்து அயல் தேசத்தில் வாழ்பவர்கள் பால்ய பிராயத்தில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடனும் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொண்டிருப்பர்.

சிலருக்கு ஒரு தசாப்தம்  வேறு சிலருக்கு இரண்டு தசாப்தத்திற்கு முன் நடைபெற்ற குலதெய்வ வழிபாடு குறித்த நடைமுறையை மறந்திருப்பர். சிலர் மட்டும் அயல் தேசத்தில் இருந்தாலும் ஓராண்டு அல்லது ஈராண்டுக்கு ஒரு முறை தாயகத்திற்கு வருகை தந்து குலதெய்வ வழிபாட்டினை பூர்த்தி  செய்திருப்பர்.

இவர்கள் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பர். இந்நிலையில் புலம்பெயர்ந்து வசிக்கும் பலர் தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில், அவர்களால் குலதெய்வ வழிபாட்டை முழுமையாக மேற்கொள்ள இயலாது. இதனால் தவிப்பவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு மாற்று உபாயத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தில் அதாவது புலம் பெயர்ந்து வசிக்கும் அல்லது வாழ்ந்து வரும் வீட்டின் மையப் பகுதியை தெரிவு செய்து கொள்ளுங்கள். தொலைபேசி அல்லது இணையதள மூலமாக இங்கு உள்ள குடும்ப ஜோதிடரிடம் நாள்- நட்சத்திரம் -கிழமை - நல்ல நேரம் ( நீங்கள் வசிக்கும் நாட்டின்  நேரம்) ஆகியவற்றை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வீட்டின் மையப் பகுதியில் மூன்று முழுமையான நுனி இலையை கிழக்கு திசையில் வைக்க வேண்டும். அதன் மீது ஒரு கோப்பை காய்ச்சிய பால், ஒரு கோப்பை முந்திரி+ பாதாம் +உலர் திராட்சை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சர்க்கரை பொங்கல், ஒரு கோப்பை மிளகு +முந்திரி பருப்பு +சீரகம் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெண்பொங்கல், பூசணிக்காய் உள்ளிட்ட  நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை கொண்ட குழம்பு அல்லது சாம்பார், வேகவைத்து மசித்த துவரம் பருப்பு + நெய் , வெற்றிலை +பாக்கு +பூ +தட்சனை+ எலுமிச்சைப் பழம் ஆகியவற்றை நிவேதனமாக வைத்து, படைத்து குலதெய்வத்தை மனதார பிரார்த்திக்க வேண்டும்.‌

'எங்களால் இங்குள்ள சூழலின் காரணமாக தாயகத்திற்கு வருகை தந்து, படையலிட்டு பொங்கல் வைத்து, உங்களை வணங்க இயலவில்லை. இருப்பினும் இங்கு நாங்கள் தரும் படையலை ஏற்றுக்கொண்டு, எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்' என மனம் உருக பிரார்த்திக்க வேண்டும். இதுபோன்ற படையலை நீங்கள் மேற்கொள்ளும் போது குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

மேலும் இது ஒரு மாற்று உபாயம் என்பதனையும், குலதெய்வத்தின் அருள் கிடைப்பதற்கான நிவாரண வழிமுறை என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். குலதெய்வத்தின் பரிபூரண அருளை பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தாயகத்திற்கு வருகை தந்து, உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து குலதெய்வ இருக்கும் இடத்திற்குச் சென்று, முறையாக படையலிட்டு, வணங்கி, அவரது அருளை பெறுவது தான் ஒப்பற்ற வழி என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் நீங்கள் பரிகாரம் செய்தாலும் அதனால் எந்த பலனும் கிடைக்காது. ஜாதகத்தின் படி கிரகங்கள் வலிமையாக இருந்தாலும் உங்களுக்கான சுப பலன்கள் நட்சத்திரத்தின் மூலம் கிடைத்தாலும் அவை குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் கிடைக்காது என்பதால், குலதெய்வ வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்வதை வழக்க படுத்திக் கொள்ளுங்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12