(எம்.ஆர்.எம்.வசீம்)
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது கேள்வியின்போது;
கடன் மறு சீரமைப்பு தொடர்பில் இரண்டு உடன்படிக்கைகள் மாத்திரமே கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. அவ்வாறானால் மேலும் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்படாத நிலையிலேயே அது பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரழலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.அவ்வாறு செயற்பட்டுள்ளமை முறைகேடானது. ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதுதொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன என்றார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலை இன்று அல்லது நாளை தயாரிப்பது தொடர்பிலும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை தொடர்பாகவும் ஜனாதிபதி தனது விஷேட உரையில் சபையில் தெளிவுபடுத்தினார். அது தொடர்பில் மீண்டும் இந்த சபைக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
அந்த வகையில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு உடன்படிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதும் இணக்கப்பாட்டுடன் அது சம்பந்தப்பட்ட பிரிவின் தகவல்களோடு பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM