டிப்பர் வாகனம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி ; ஒருவர் காயம்

02 Jul, 2024 | 05:59 PM
image

குருணாகல் பிரதேசத்தில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருணாகல் - புத்தளம் வீதியில் கெலிமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (1) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாரியபொலயிலிருந்து பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் பலத்த காயமடைந்துள்ள நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29
news-image

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு...

2025-06-17 20:13:43