தலவாக்கலை தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், அதற்கு ஆதரவாக தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்களும் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நுவரெலியா - தலவாக்கலை பஸ் சாரதிக்கும் நுவரெலியா - ஹட்டன் சொகுசு பஸ் சாரதிக்கும் இடையில் கடந்த (30) ஆம் திகதி மாலை தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அன்று இரவு இனந்தெரியாத நபர்கள் நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பஸ்களின் முன் பக்க கண்ணாடிகளை தாக்கி சேதப்படுததியுள்ளனர் .
இதன் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (02) நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பஸ் பயணங்களை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM