சிறப்பாக நடைபெற்ற மருதமடு அன்னைக்கு முடி சூட்டிய நூற்றாண்டு விழாவும், ஆடித் திருவிழா திருப்பலியும் !

02 Jul, 2024 | 02:55 PM
image

மருதமடு அன்னைக்கு முடி சூட்டிய நூற்றாண்டு விழாவும் ஆடித் திருவிழா திருப்பலியும் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.  

இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 6.15 மணி அளவில்  மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில்இ கொழும்பு உயர் மறைமாவட்ட  பேராயர்   கர்தினால் மெல்கம் ரஞ்சித்  ஆண்டகை மற்றும்  குருநாகல் மறைமாவட்ட ஆயர்   கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேரா  ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்று நேற்று திங்கட்கிழமை (01) மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெற்றுள்ளது.

 மருதமடு அன்னைக்கு முடி சூட்டிய நூற்றாண்டு விழாவும் ஆடித் திருவிழா திருப்பலியும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு உயர் மறைமாவட்ட    பேராயர்   கர்தினால் மெல்கம் ரஞ்சித்  ஆண்டகை மற்றும்  குருநாகல் மறைமாவட்ட ஆயர்   கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேரா  ஆகியோர் ,    மற்றும் மடு பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் இமன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி ஆக தமிழ் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுத்தனர்.

அதனைத்  தொடர்ந்து மடு அன்னைக்கு முடி சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் கொழும்பு உயர் மறைமாவட்ட  ஆயர்  கருதினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகை இணைந்து முடிசூட்டி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மன்னார் மறைமாவட்ட ஆயரினால் நூற்றாண்டு விழவை முன்னிட்டு ஏற்றி வைக்கப்பட்ட கொடி இறக்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி மற்றும்  மடு அன்னையின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள் , அருட் சகோதரர்கள்,  வடமாகண ஆளுனர், அரசியல் பிரமுகர்கள் திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ் கழக தலைவராக கலைஞர் சுதாகர்...

2024-07-24 18:48:40
news-image

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி

2024-07-24 17:25:20
news-image

யாழ் மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை...

2024-07-23 15:16:33
news-image

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்...

2024-07-23 12:53:28
news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18