(எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹிந்த ராஜபக்ஷ தான் தொடர்ந்து இளமை தோற்றத்தில் இருப்பதற்காக மக்களின் வரிப்பணத்தில் மில்லியன் கணக்கான ரூபா செலவில் அமெரிக்காவுக்கு சென்று ஊசி மருந்து ஏற்றியுள்ளார். தற்போதும் அதனை ஏற்றிவருகின்றார் முடியுமானல் இதனை அவர் நிராகரிக்கட்டும் என  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.