ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியான டிக்ரிட்டில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 42 படுகாயமடைந்துள்ளனர்.

பொலிஸ் துறையை சேர்ந்த ரோந்து படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலைப் படையை சேர்ந்த ஐந்து பேர் காவல் அதிகாரியின் வீட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என சலாஹ_தீன் மாகாண சபையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தற்கொலைப்படையை சேர்ந்த மூன்று பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், இரண்டு பேர் தங்கள் மீது கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர் என அகமது அல்-கரீம் என்பவர் தெரிவித்துள்ளார். 

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பொலிஸார் என்றும் இந்த தாக்குதலில் 42 பேர் காயமுற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தும் மொசுல் துப்பாக்கி சூட்டில் நடந்த இதே போன்ற தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சுன்னி எனும் தீவிரவாத அமைப்பு அடிக்கடி ஈராக் பாதுகாப்பு படையினரை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.