எம்முடைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான உணவுகளை பசியாறுவதை விட, சுவையான உணவுகளுக்குத்தான் முன்னுரிமையும், முக்கியத்துவத்தையும் அளிக்கிறார்கள். மேலும் உடல் உழைப்பு குறைவு, அகால வேளையில் அதிக உணவு போன்ற காரணங்களாலும் அவர்களின் உடல் எடை என்பது உலக சுகாதார ஸ்தாபனம் நிர்ணயித்த அளவைவிட அதிகரிக்கிறது.
எம்மில் பலரும் கூடுதல் எடையுடன் இருப்பதை விட, உடல் பருமனாக இருப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். வைத்தியர்களின் கூற்றுப்படி உடற் பருமன் என்பது ஒரு நோய். உடல் எடையை சீராக பராமரிக்கவில்லை எனில் உடற்பருமன் ஏற்பட்டு, அதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறார்கள்.
அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு எம்மில் பலரும் பலவித அணுகு முறையை கையாள்கிறார்கள். பிரத்தியேக உணவு முறை, உணவு கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி என பலவற்றை பின்பற்றினாலும் இதனை தங்களது நாளாந்த பழக்க வழக்கமாக மாற்றிக் கொள்ள இயலாமல், சுவையான உணவை கண்டவுடன் அதற்கு விருப்பப்பட்டு, கூடுதலாக பசியாறுகிறார்கள்.
இதன் காரணமாக அவர்களால் உடல் எடையை சீராக பேண முடிவதில்லை. இந்நிலையில் வைத்திய நிபுணர்கள் எளிதாக உடல் எடையை குறைப்பதற்காக அறிமுகமாகி இருக்கும் ஸ்வாலபிள் கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை ( Swallowable Gastric Baloon) எனும் நவீன சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சையின் போது வைத்தியர்கள் உங்களது உடற்பருமனை குறைப்பதற்காக பல கட்ட பரிசோதனைகளை முதல் கட்டமாக மேற்கொள்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ஸ்வாலபுள் பலூன் சிகிச்சை எனும் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இந்த தருணத்தில் அவர்கள் மயக்க மருந்து வழங்காமலும், எண்டோஸ்கோப்பிக் எனும் பரிசோதனை சிகிச்சை முறையை மேற்கொள்ளாமலும், எளிதில் விழுங்க கூடிய பலூன் ஒன்றை வாய் வழியாக உள்ளே செலுத்துகிறார்கள்.
அந்த பலூன் நேரடியாக எம்முடைய இரைப்பை பகுதிக்கு செல்கிறது. இதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு, அந்த பலூனை விரிவடையச் செய்கிறார்கள். அந்த பலூன் இரைப்பை பகுதியில் விரிவடைகிறது. இதனால் நீங்கள் பசியாறும் உணவின் அளவு குறைகிறது. அதாவது சிறிதளவு பசியாறினாலும் உங்களது பசி அடங்கியது போன்ற உணர்வு தோன்றுவதால், பசியாறுவதை குறைத்துக் கொள்கிறீர்கள்.
இதன் காரணமாக நாளடைவில் நீங்கள் பசியாறும் உணவின் அளவு குறைந்து, அதனூடாக உடல் எடை குறைய தொடங்குகிறது. இந்த பலூன் இரைப்பையில் இருப்பதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமோ..! என்ற அச்சம் தேவையில்லை. ஏனெனில் இந்த பலூன் சிலிக்கான் எனும் பிரத்யேக பொருளால் உருவாக்கப்படுகிறது. எளிதில் உடையாது. இதற்கான காலக்கெடுவை வைத்தியர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். நான்கு மாத காலத்திற்குப் பிறகு இரைப்பையில் இருக்கும் சிலிக்கான் பலூன் சிறிது சிறிதாக வலுவிழந்து அவை எம்முடைய மலக்குடல் பகுதி வழியாக வெளியேறிவிடும்.
இதனால் எந்த பாதிப்பும், பக்க விளைவும் ஏற்படுவதில்லை. நான்கு மாதம் கழித்து உங்களது எடையை கணக்கிட்டால் அவை கணிசமாக குறைந்திருக்கும். வெளி நோயாளியாகவே வைத்தியசாலைக்கு வருகை தந்து இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள இயலும். இத்தகைய சிகிச்சையின் காரணமாக உங்களது உடல் எடை குறையும். நீங்களும் உயிரிழப்பிற்கான அச்சுறுத்தல் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவீர்.
வைத்தியர் பிரவீண்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM