எம்மில் பலரும் அவர்களுடைய ஜாதக குறிப்புகளுக்கு அப்பாற்பட்டு செல்வ நிலையில் உயர்ந்திருப்பர். மேலும் சில செல்வந்தர்களின் ஜாதகத்தை ஆராயும் போது அவர்கள் ஜோதிடத்தில் குருவாக போற்றப்படும் பராசரர் அருளிய ஜோதிட குறிப்புகளுக்கு அப்பாற்பட்டிருப்பர். இந்நிலையில் ஆன்மீக அன்பர்களும், ஜோதிட நிபுணர்களும் பராசரர் காலத்திற்குப் பிறகு ஜோதிடத்தில் ஆய்வு செய்த பல அறிஞர்களின் குறிப்புகளையும் ஆய்வு செய்யத் தொடங்கினர்.
அதில் ஜெய் முனி மகரிஷி எனும் வட இந்திய சோதிட ஞானி ஒருவருடைய ஜாதகத்தில் செல்வ நிலையை குறிப்பிடும் ஆருடா லக்னம் குறித்து சில விதிமுறைகளை வகுத்திருக்கிறார். அந்த விதிமுறைகள் தற்போது பலருக்கும் அவருடைய ஜாதகத்தில் பதிலீடு செய்து ஆய்வு செய்து பலன்களை கூறுகிறார்கள்.
ஆருடா லக்னம் என்பது நீங்கள் ஏதேனும் ஒரு லக்னத்தில் பிறந்திருப்பீர்கள். இதனை ஜென்ம லக்னம் என குறிப்பிடுவர். லக்னாதிபதி உங்களுடைய ஜாதக கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் வீற்றிருக்கலாம். உதாரணமாக நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய லக்னாதிபதியான புதன்- உங்களுடைய லக்னத்திலிருந்து ஐந்தாம் இடத்திலோ அல்லது ஆறாமிடத்திலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ இருக்கக்கூடும்.
இந்நிலையில் ஆருடா லக்னம் என்பதனை எப்படி கணக்கிடுகிறார்கள் என்றால் நீங்கள் பிறந்த லக்னத்தின் அதிபதி உங்களுடைய லக்னத்திலிருந்து எந்த இடத்தில் வீற்றிருக்கிறாரோ அந்த இடம் வரை எண்ண வேண்டும். அதன் பிறகு லக்னாதிபதி இருக்கும் இடத்திலிருந்து நீங்கள் எண்ணிய எண்ணிக்கையை எண்ணி, அது எந்த இடத்தில் வருகிறதோ அந்த இடம்- அந்த வீடு -அந்த ஜாதக கட்டம்- தான் உங்களுடைய ஆருடா லக்னமாகும்.
உதாரணத்திற்கு நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய லக்னாதிபதி புதன் - லக்னத்திலிருந்து ஒன்பதாம் வீடாகிய கும்பத்தில் இருக்கிறார் என்றால் கும்பத்திலிருந்து ஒன்பதாம் வீடாகிய துலாம் வீடு தான் உங்களுடைய ஆருடா லக்னமாகும்.
இது உங்களின் ஜென்ம லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குறிப்பிடுவதால் நீங்கள் ஆருடா லக்ன விதிகளின்படி துலா லக்னத்தின் அதிபதியான சுக்கிரன் உங்களுடைய ஜாதக கட்டத்தில் வலிமை மிக்கவராக இருந்தால் செல்வந்தர்களாக இருப்பீர்கள் என குறிப்பிடுகிறது.
நீங்கள் உங்களுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தையும், ஆருடா லக்னத்தையும் கணித்து, ஆருடா லக்னத்திலிருந்து இரண்டாம் இடம் அல்லது ஏழாம் இடத்தில் புதன் பகவான், குரு பகவான், சுக்கிர பகவான் ஆகிய சுபக்கிரகங்கள் இருந்தால் அவை வலிமையுடன் இருந்தால் செல்வத்தை அள்ளி அள்ளித் தந்து உங்களை செல்வந்தராக உயர்த்துவார்.
உங்களுடைய ஜென்ம லக்னத்தையும், ஆருடா லக்னத்தையும் கணித்து, அதில் ஆருடா லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டில் சந்திரன் பகவான் இருந்தால் அவரும் செல்வந்தராக உயர்வார்.
உங்களுடைய ஜென்ம லக்னத்தையும், ஆருடா லக்னத்தையும் கணித்து, அதில் ஆருடா லக்னத்திலிருந்து ஏழாம் இடம் அல்லது பன்னிரண்டாம் இடத்தில் ராகு இருந்தால் அவர் ஆன்மீகவாதியாக புகழ் பெறுவார்.
ஆருடா லக்னத்தில் புதன் பகவான் இருந்தால் அவருக்கு அதீத சக்தியையும், ஆற்றலையும் வழங்குகிறார்.
ஆருடா லக்னத்தில் குரு பகவான் இருந்தால் ஜாதகருக்கு அதீத அறிவாற்றலை வழங்குகிறார்.
ஆருடா லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்திருந்தால் ஜாதகருக்கு கவிதை பாடும் திறனை வழங்கி பிரபலப்படுத்துவார்.
ஜென்ம லக்னத்திலிருந்து ஆருடா லக்னத்தை அவதானித்து, அதில் இருந்து கேந்திரங்களிலும் திரிகோணத்திலும் சுப கிரகங்கள் இருந்தால் , அவரும் செல்வ நிலையில் உயர்வார்.
உங்களது செல்வ நிலையை குறிப்பிடும் ஆருடா லக்னம் குறித்து உங்களது குடும் ஜோதிடரிடமோ அல்லது அனுபவம் மிக்க ஆன்மீக அன்பர்களிடமோ கேட்டு தெரிந்து கொண்டு, உங்களது செல்வ நிலையின் அளவை தெரிந்துக் கொள்ளலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM