ஐ.பி.எல். கிண்ணம் யாருக்கு? : பிரபல ஜோதிடர் கணிப்பு : மாலிங்க, மெக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித் தொடர்பிலும் அதிர்ச்சி தகவல் 

Published By: MD.Lucias

05 Apr, 2017 | 01:53 PM
image

இந்திய ரசிகர்கள் மாத்திரமன்றி உலக ரசிகர்கள் எதிர்பார்த்த 10ஆவது ஐ.பி.எல் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

உலக கிரிக்கெட் அணிகளின் முன்னணி வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதால் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக அமையும்.

இதேவேளை ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் எந்த அணி வெற்றி பெறும் அல்லது தோல்வியை தழுவும் என ரசிகர்களும் கணித்து வருகின்றார்கள்.

இந்நிiயில் மும்பையைச் சேர்ந்த கிரீன்ஸ்டோன் லோபோ என்ற பிரபல ஜோதிடர் இவ் வருடம் எந்த அணி ஐ.பி.எல். கிண்ணத்தை சவீகரிக்கும் என அறிவியல் பூர்வமாக எதிர்வு கூறியுள்ளார்.

ஐ.பி.எல். தொடர்பில் எதிர்வு கூறியுள்ள கிரீன்ஸ்டோன்,

இந்த கணிப்பு ஒவ்வொரு அணியின் தலைவர்களின் ஜாதக நிலையை வைத்து கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இம்முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடரஸ் அணிகளுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவர்கள் ஏற்கனே வெற்றியின் கனியை இருமுறை சுவைத்து விட்டார்கள். குறித்த இரு அணியிலும் நட்சத்திர வீரர்களான லசித் மாலிங்க, யூசுப் பதான் மற்றும் ஹர்பதான் சிங் போன்றோர் காணப்பட்டாலும் அவர்கள் வலுவிழந்த நிலையில் உள்ளனர். இதனால் குறித்த அணிகளுக்கு அவர்களால் கூடுதலான பங்களிப்பு வழங்க முடியாது.

இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோரின் ஜாதகங்கள் ஏனைய அணித் தலைவர்களுடன் ஒப்பிடும் போதும் மிகவும் வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றன.

ரைசிங் புனே சுப்பர் ஜிகாண்ட் அணித் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோரின் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என கூறப்பட்டாலும் அவர்களால் வெற்றிப்பெற முடியாது.

இதேவேளை ரைசிங் புனே சுப்பர் ஜிகாண்ட் அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள ஸ்டீபன் பிளேமிங், ஏற்கனே சென்னை அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த காலத்தின் வெற்றியின் கனியை சுவைத்துள்ளார். எனவே தற்போது அவர் ரைசிங் புனே சுப்பர் ஜிகாண்ட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருப்பதாலும் ரைசிங் புனே சுப்பர் ஜிகாண்ட் அணி கிண்ணத்தை வெல்லாது.

இதேவேளை விரேந்திர செவாக் இடம்பித்துள்ள கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஒப்பீட்டளவில் பலவீனமானதாக உள்ளது. எனினும் இந்த அணியின் தலைவராக இயோன் மோர்கனை நியமித்திருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். 

அணித் தலைவராக இயோன் மோர்கள் செயற்பட்டால் களமிறங்கும் பதினொருவர் அணியில் முரளி விஜய், ஷோன் மார்ஷ் மற்றும் டெரன் சமி ஆகியோர் இடம்பிடிக்காவிட்டாலும் அணி வெற்றி பெறும். எனினும் கிளேன் மெக்ஸ்வெல் அணியை வழிநடத்துவதால் பஞ்சாப் அணி வெற்றி பெறாது.

இதேவேளை இந்தாண்டு நடக்கும் 10 வது ஐபிஎல் தொடரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 இதேவேளை டெல்லி அணி ஏனைய அணிகளுக்கு இம்முறை கடும் சவாலளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கணிப்பு ஒவ்வொரு அணியின் தலைவர்களின் ஜாதக நிலையை வைத்து கணித்துள்ளதாகவும் ஒருவேளை திடீரென்று அணியில் தலைவர்கள் மாறினால், இந்த கணிப்புகளும் மாறும் என்று தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50
news-image

எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும்...

2023-11-28 12:23:12
news-image

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின்...

2023-11-28 09:58:58
news-image

அரசியல்வாதியாக அவதாரமெடுக்கின்றார் ஷாகிப் அல் ஹசன்

2023-11-27 14:38:26
news-image

இளையோர் உலக குத்துச் சண்டையில் களமிறங்கும்...

2023-11-25 14:16:41
news-image

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர்

2023-11-25 12:16:36
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் “ஜேர்சிகள்”...

2023-11-25 12:04:52
news-image

ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை...

2023-11-24 17:48:33
news-image

தனுஸ்க விவகாரம் - அவுஸ்திரேலிய பொலிஸார்...

2023-11-24 12:20:51
news-image

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் விரர்...

2023-11-23 13:18:49
news-image

இரத்தம் சொட்டச்சொட்ட ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது...

2023-11-22 20:14:15
news-image

சுவிற்ஸர்லாந்தில் JKI கராத்தே சுற்றுப்போட்டி 2023...

2023-11-22 11:51:42