சென்னை'ஸ் அமிர்தா குழுமத்தின் விளம்பர தூதுவரான நடிகை ஸ்ரீ லீலா

Published By: Digital Desk 7

01 Jul, 2024 | 04:13 PM
image

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சென்னை'ஸ் அமிர்தா  குழுமத்தின் விளம்பர தூதுவராக முன்னணி இளம் நட்சத்திர நடிகையான ஸ்ரீ லீலா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை சென்னை'ஸ் அமிர்தா குழுமம் வெளியிட்டுள்ளது.

சென்னை'ஸ் அமிர்தா குழுமம்- 'ஓ' லெவல் மற்றும் 'ஏ' லெவல் பயின்ற மாணவ மாணவிகளுக்கு விருந்தோம்பல் துறையில் பயிற்சி அளித்து, அதற்குரிய சர்வதேச தரத்திலான சான்றிதழ்களையும் வழங்கி முன்னணி நட்சத்திர ஹொட்டேல்களில் பணி வாய்ப்பினை அளித்து வருகிறது.  மேலும் பயிற்சி பெறும் காலகட்டத்திலேயே மாணவ மாணவிகளுக்கு பகுதி நேர பணி வாய்ப்பினையும் ஏற்படுத்தி, அவர்களின் தன்னம்பிக்கையையும் மேம்படுத்தி வருகிறது. 

இந்நிறுவனம் இதுவரை சர்வதேச அளவில் இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு விருந்தோம்பல் துறையில் பயிற்சி அளித்து, பல நாடுகளில் செயல்பட்டு வரும் நட்சத்திர ஹொட்டேல்களில் விருந்தோம்பல் துறைகளில் பணி அமர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை சிறக்க செய்திருக்கிறது.

தற்போது சென்னை'ஸ் அமிர்தா குழுமம்- விமான நிலைய மற்றும் விமான துறையில் விருந்தோம்பல் பணிகளை மேற்கொள்வதற்காக சர்வதேச ஏவியேசன் கல்லூரியினை தொடங்கி இருக்கிறது.

இதற்கான பிரத்யேக இணையதளத்தை இக்குழுமத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் நடிகை ஸ்ரீ லீலா தொடங்கி வைத்தார். மேலும் சென்னை'ஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேசன் கல்லூரியில் முதலில் இணைந்த பத்து மாணவ மாணவிகளுக்கு அனுமதி சான்றிதழையும் நடிகை ஸ்ரீ லீலா வழங்கினார்.

சென்னை அமிர்தா குழுமம் தற்போது சென்னை, பெங்களூரூ, விஜயவாடா, ஹைதராபாத் ஆகிய மாநகரங்களில் தங்களுடைய கல்வி நிறுவனங்களை இயக்கி வருகிறது. மேலும் மலேசியாவில் உள்ள ஏவியேசன் பல்கலைக்கழகத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைசாத்திட்டிருக்கிறது. சென்னை'ஸ் அமிர்தா குழுமம்  கேட்டரிங் கல்வியில் பர்மிஹார்ம் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு சர்வதேச அளவிலான தரத்துடன் கூடிய படிப்புகளையும் வழங்கி வருகிறது.

இதனிடையே சென்னை'ஸ் அமிர்தா குழுமத்தில் பயின்ற மாணவ மாணவிகள் அண்மையில் ஜேர்மனி நாட்டில் உள்ள ஸ்டட்கார்ட் எனுமிடத்தில் நடைபெற்ற சமையல் பிரிவிற்கான ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றி மூன்று தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியிலும் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை'ஸ் அமிர்தா குழுமம் வழங்கும் கேட்டரிங் ஏவியேசன் துறை சார்ந்த படிப்புகளை கற்ற மாணவ மாணவிகளுக்கு சர்வதேச அளவில் பணி வாய்ப்பினை பெற்று, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதால். தெற்காசிய நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களிடத்திலும் சென்னை'ஸ் அமிர்தா குழுமத்தின் தொழில் கல்விப் பணியை போற்றுகிறார்கள். மேலும் தங்களது பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து சென்னை'ஸ் அமிர்தா குழுமத்தில் இணைந்து கல்வி கற்கவும் மனமுவந்து அனுமதி அளிக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது என கல்வியாளர்களும் பாராட்டுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ் கழக தலைவராக கலைஞர் சுதாகர்...

2024-07-24 18:48:40
news-image

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி

2024-07-24 17:25:20
news-image

யாழ் மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை...

2024-07-23 15:16:33
news-image

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்...

2024-07-23 12:53:28
news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18