மர்மமான முறையில் தீக்காயங்களுக்குள்ளான ஈ.பி.டி.பி.யின் அமைப்பாளர் உயிரிழப்பு - யாழில் சம்பவம் !

Published By: Digital Desk 7

01 Jul, 2024 | 12:10 PM
image

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் தீக்காயங்களுக்குள்ளான நபர்  சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் (20) அன்று இரவு  நபரொருவர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன் போது, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு  அனுமதிக்கப்பட்டிருந்த நபர்  சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளார்.

மருதங்கேணியைச் சேர்ந்த  44 வயதுடைய 3 பிள்ளைகளின்  தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளராகவும்,  வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்  முன்னாள் இயக்குனருமாக செயற்பட்டு வந்தவராவார்.

குறித்த நபர், தீக்காயத்திற்கு உள்ளானதற்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவுமில்லை என்பதோடு சடலமானது பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக முடிவு பள்ளத்தாக்கில் கீழே தள்ளி...

2024-10-14 21:42:22
news-image

சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிப்பு;...

2024-10-14 20:21:00
news-image

மட்டக்களப்பில் மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி...

2024-10-14 20:06:41
news-image

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகனமொன்றினை...

2024-10-14 19:44:07
news-image

ஆயுர்வேத வைத்தியரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை...

2024-10-14 21:39:04
news-image

தமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர், நிர்வாக செயலாருக்கு...

2024-10-14 21:25:30
news-image

யானை சின்னத்தின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை...

2024-10-14 17:57:12
news-image

இரவு நேர களியாட்ட விடுதிகளில் சுற்றிவளைப்பு...

2024-10-14 17:44:44
news-image

தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் இன்று...

2024-10-14 17:43:47
news-image

துணைவிமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி...

2024-10-14 17:25:55
news-image

குருணாகலில் குளவி கொட்டுக்கு இலக்காகி 39...

2024-10-14 17:27:49
news-image

எதிர்க்கட்சியிலிருந்து பேசியது போல ஜனாதிபதி அநுர...

2024-10-14 17:27:28