சர்வதேச நீதி கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

01 Jul, 2024 | 03:25 AM
image

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தால் பழைய பேருந்து நிலையம் முன்பாக 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ''எமக்குச் சர்வதேச நீதியே வேண்டும், எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே,  அலுவலகம் எமக்கு வேண்டாம், கையில் கொடுத்த பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் எதற்கு, நாம் இழப்பீட்டைக் கோரவில்லை, கையில் தந்த எமது சிறுவர்கள் எங்கே'' என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஜெனீற்றா,

எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது. சர்வதேச நீதியே எமக்கு வேண்டும். அலுவலகம் எமக்குத் தேவையில்லை எனக் கூறிய போதும் அதனை இரகசியமாக எமது பகுதிகளில் நிறுவியுள்ளார்கள். தற்போதைய ஜனாதிபதி ரணில் அவர்கள் கிராம அலுவலர் ஊடக அலுவலகத்தின் வேலைகளை முன்னெடுத்துள்ளார். வாழ்வாதார உதவிகளை வழங்கி எமது போராட்டத்தை மழுங்கடிக்க முற்படுகிறார்கள். இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விழிப்பாக இருக்க வேண்டும். எமக்கு நீதி வேண்டும். உயிர் உள்ளவரை நீதிக்காக நாம் போராடுவோம் எனத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க சென்னை...

2026-05-16 17:20:15
news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைப்பு...

2026-05-16 17:27:10
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20