01ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தை கருத்தில் கொண்டு பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் 01ஆம் திகதி திங்கட்கிழமை கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்பட வேண்டுமெனவும், அதன்படி நாளை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சஷி வெல்கம தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM