கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (30) காலை பாத யாத்திரையை தொடங்கினர்.
பக்தர்களுக்கான லாகுகலை உகந்தை காட்டுப் பாதையின் கதவானது, உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று காலை 6.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்துவைக்கப்பட்டது.
பாத யாத்திரீகர்களுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இதன்போது கலந்துகொண்டனர்.
ஆரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தினை இன்று ஆரம்பித்தனர்.
மேலும், எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் 2024.07.22 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.
அத்துடன் இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2024.07.11 அன்று மூடப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM