நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்துவந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (29) கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை மக்பூலியா பகுதியில் கேரள கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸார் பெரும் சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைதானவர் 36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன் அவர் வசமிருந்து 11,100 மில்லி கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்வதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM