(ஆர்.ராம்)
பாக்கு நீரிணையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லை தொடர்பில் எந்த விதமான புதிய ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாக்.ஜலசந்தி மற்றும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் நோக்கிய எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
பாக்.ஜலசந்தி மற்றும் கச்சத்தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை குறித்தும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை (28) இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழ் வெளியான செய்தி தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘த இந்து’ நாழிதழ் புதிய ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தம் பற்றிய எந்தவிதமான உள்ளடக்கங்களையும் வழங்கவில்லை. அதேபோன்று தான் கலந்துரையாடல்கள் பற்றிய விடயத்தினையும் குறிப்பிட்டுள்ளது. எனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அவ்வாறான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஆகவே, ‘த இந்து’ வெளியிட்ட தகவல்களுக்கு அமைவாக எந்தவிதமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM