தமிழ் திரையுலகின் தனித்துவமான அடையாளங்களில் ஒருவரான இயக்குநர் பாலாவின் உதவியாளரான விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கொட்டேஷன் கேங்' எனும் திரைப்படம், ஹைப்பர் லிங்க் பாணியிலான கதையாக உருவாகி இருக்கிறது என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பரபரப்பையும், அதிர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. குற்றவியல் தொடர்பான நிழலுலகில் வாழும் மனிதர்களை பற்றியும், போதை பொருட்களின் பாவனை பற்றியும், காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகையை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் இளைஞனுக்கும் -அங்குள்ள இளம் பெண்ணுக்கும் இடையேயான காதலை பற்றியும், ஒரு தந்தைக்கும்- மகளுக்கும் இடையேயான அன்பு பகிர்தலில் ஏற்படும் பற்றாக்குறையை பற்றியும் இந்த முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகள் குறிப்பிடுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
பாலாவின் உதவியாளர் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் தரம் தெரிகிறது. ஒட்டுமொத்த பட குழுவினரின் கடும் உழைப்பும் தெரிகிறது. கவர்ச்சி நடிகையாக கருதப்படும் சன்னி லியோனுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை வழங்கி இருப்பதும் தெரிகிறது. 'முத்தழகு'வாக ரசிகர்களின் மனதை வென்ற பிரியா மணியை அழுக்கு தோற்றத்துடன் கையில் ஆயுதத்தை ஏந்த வைத்திருப்பதும் தெரிகிறது. 'தாரை தப்பட்டை' படத்தில் நடன கலைஞராக நடித்த அக்ஷயாவை வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பதும் தெரிகிறது.
பொலிவூட் நடிகரான ஜேக்கி ஷெராப்பை கண்களாலையே வில்லத்தனம் செய்யும் நபராக காட்டியிருப்பதும் தெரிகிறது. திறமையான மலையாள நடிகரான அஷ்ரப் மல்லிச்சேரியை அசால்டான ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பதும் தெரிகிறது.. இப்படி முன்னோட்டம் முழுவதும் புதிய விடயங்கள் இணைக்கப்பட்டிருப்பதாலும் அவை ரசனையுடன் படமாக்கப்பட்டிருப்பதாலும்... 'கொட்டேஷன் கேங்' படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM