துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்- காளமாடன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு !

29 Jun, 2024 | 06:25 PM
image

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வரும் 'பைசன் காளமாடன்' எனும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' ஆகிய திரைப்படங்களை இயக்கி தனித்துவமான படைப்பாளி என்ற முத்திரையை பதித்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைசன்- காளமாடன்' எனும் திரைப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள், 'அருவி' மதன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்து வரும் இந்தத் திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். கபடி விளையாடும் வீரரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் பலவீனப்படுத்தப்பட்ட குரலை.. ஆதிக்கம் செலுத்தும் வகையில்  டிஜிட்டல் செல்லுலாய்ட் திரையில் செதுக்கும் படைப்பாளியான மாரி செல்வராஜ்- தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருவதால்... அவரின் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30