'நடனப் புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' வுல்ஃப் ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெண்ணிலவே..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' வுல்ஃப்' எனும் திரைப்படத்தில் பிரபு தேவா, ராய் லட்சுமி, வசிஷ்டா என், சிம்ஹா, அனுசுயா பரத்வாஜ், அஞ்சு குரியன், ரமேஷ் திலக், 'லொள்ளு சபா' சாமிநாதன், தீபா, ஸ்ரீ கோபிகா, சுஜாதா, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் என். சந்தேஷ் தயாரித்திருக்கிறார்.
தற்போது இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'வெண்ணிலவே என் வெண்ணிலவே நீ ..'எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத, நடிகரும், பின்னணி பாடகருமான முகேன் ராவ் மற்றும் பாடகர் சரத் சந்தோஷ் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். மெல்லிசை + மேலே தேய இசையின் தாள லயம் + காதலுக்கான இளமை ததும்பும் பாடல் வரிகள் + ஆங்கில பாடல் வரிகள்+.. என இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இந்தப் பாடல் இருப்பதால்.. பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM