லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா வெளியிட்ட 'நேசிப்பாயா' பட ஃபர்ஸ்ட் லுக்

29 Jun, 2024 | 06:26 PM
image

மறைந்த நடிகர் முரளியின் இளைய வாரிசான ஆகாஷ் முரளி கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'நேசிப்பாயா' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா வெளியிட்டு, ஆகாஷ் முரளிக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்டைலிஷ் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நேசிப்பாயா' எனும் திரைப்படத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பூ, பிரபு, ராஜா, பொலிவுட் நடிகை கல்கி கொச்லீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமரோன் எரிக் பிரைசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இளமை ததும்பும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் எஸ். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஆகாஷ் முரளியின் மனைவியும், இயக்குநருமான சினேகா பிரிட்டோ இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது 'லேடி சுப்பர் ஸ்டார்' நயன்தாரா, 'கோலிவுட் ஆணழகன்' ஆர்யா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர். இவ்விழாவில் தமிழ் திரையுலகத்திற்கு புதிய கதாநாயகனாக அறிமுகமாகும் ஆகாஷ் முரளியை லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், திரையுலகினருக்கும் அறிமுகப்படுத்தினார். 

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசுகையில், '' இந்த திரைப்படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து, அவர் தங்கியிருந்த மும்பைக்கு சென்று, அவரை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தி, ஆகாஷ் முரளியை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விவரித்து, இந்த திரைப்படத்தை உருவாக்கியதில் என்னுடைய மகளும், ஆகாஷ் முரளியின் மனைவியும், இயக்குநரும், இணை தயாரிப்பாளருமான சினேகா பிரிட்டோவின் பங்களிப்பு தான் அதிகம். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற்றது. ஆகாஷ் முரளியின் நடிப்பு தனித்துவமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. இந்த திரைப்படம் தரமான படமாகவும், அனைவரும் ரசிக்கும் படமாகவும் இருக்கும்'' என்றார். 

பொதுவாக ஃபர்ஸ்ட் லுக் என்பது ஒரே ஒரு போஸ்டரை வெளியிடுவது என்பது தமிழ் திரை உலகில் மரபாக பின்பற்றி வந்த நிலையில்... 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் நாயகன் மற்றும் நாயகிக்கு என பிரத்யேகமாகவும், இருவரும் இணைந்திருப்பது போன்றும் என மூன்று போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.  

இதனிடையே சிறை தண்டனை பெற்ற கைதி ஒருவரின் காதலை கதையின் நாயகி ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்ற விடயத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை தயாராகி இருக்கிறது எனும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட்டிற்கு 'டெஸ்ட்'...

2025-03-26 16:48:38
news-image

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்

2025-03-26 16:03:40
news-image

'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திகில் திரைப்பட...

2025-03-26 15:08:17
news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30